Advertisement

முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர ஒரே எளிய வழி இது தான்

By: vaithegi Tue, 22 Aug 2023 4:58:14 PM

முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர ஒரே எளிய வழி இது தான்

இந்த முறையை நாம் புதிதாக கண்டுப்பிடித்து கிடையாது நம் பாட்டி காலத்திலிருந்த இருந்த ஒரு முறையை தான் இப்போது அதில் கொஞ்சம் பொருட்களை சேர்த்து நாம் தயாரிக்கப் போகிறோம். நம் பாட்டி காலத்திலிருந்தே முடி வளர அவர்கள் கையாண்ட ஒரு அற்புதமான மருந்து எனில் நல்லெண்ணெய் தேய்த்து தலைக்கு குளிப்பது தான்.

இந்நல்லெண்ணெய் நம் உடல் சூட்டை குறைப்பதுடன் தலையில் உள்ள உஷ்ணத்தையும் குறைத்து முடிகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து முடி அதிகமாக வளரவும், அதே நேரத்தில் இளநரையை தடுத்து முடி கருப்பாக வளர வைக்கவும் இந்த எண்ணையை நாம் பயன்படுத்தி வந்திருக்கிறார் கள். இப்போது அந்த எண்ணெயில் நாம் இந்த 2 பொருட்களை சேர்க்க வேண்டும் ஒன்று துளசி மற்றொன்று வேம்பாலட்டை.

hair,problem ,முடி ,பிரச்சனை

இந்த எண்ணெய் தயாரிக்க 200 கிராம் சுத்தமான சைக்கிள் ஆட்டிய நல்லெண்ணெய் வாங்கிக் கொள்ளுங்கள். அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து லேசாக சூடாகும் இந்த நேரத்தில் ஒரு கைப்பிடி துளசி இலையை சேர்த்துக் கொள்ளுங்கள். துளசி இலையை அலச வேண்டாம். ஈரத்துடன் எண்ணெயில் போடக் கூடாது. இதற்கு அடுத்ததாக 10 கிராம் வேம்பாலயை பட்டை வாங்கி அதையும் இதில் சேர்த்து லேசாக எண்ணெய்யை சூடு படுத்தினால் போதும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு இந்த எண்ணெயை அப்படியே வைத்து விடுங்கள்.

இரவு முழுவதும் இது அப்படியே இருந்தால் கூட நல்லது தான் அல்லது உடனடியாக வேண்டுமென்றால் குறைந்தது 1 மணி நேரமாவது அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு இந்த எண்ணெய்யை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் முடியில் இந்த எண்ணெய் தேய்ப்பதற்கு முன்பு அதில் கொஞ்சம் இயற்கையான ஆலிவேரா ஜெல்லை கலந்து நன்றாக முடியும் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து விடுங்கள்.

இதை தேய்க்கும் போது முடியில் ஒவ்வொரு பாகமாக பிரித்து வேர்க்கால்களில் படும்படி நன்றாக தேய்த்து விடுங்கள். இதுவே ஒரு மசாஜ் செய்தது போல இருக்கும். அதன் பிறகு மைல்டான ஷாம்பூ அல்லது சீயக்காய் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி தலையை கசக்கி விடுங்கள். இந்த எண்ணெய் வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி குளித்தால் கூட போதும். உங்கள் முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாகி விடும்.

Tags :
|