- வீடு›
- அழகு குறிப்புகள்›
- தலைமுடி உதிர்வு குறித்து கவலைப்படுபவர்கள் இதை படியுங்கள்
தலைமுடி உதிர்வு குறித்து கவலைப்படுபவர்கள் இதை படியுங்கள்
By: Nagaraj Mon, 06 June 2022 6:39:40 PM
சென்னை: இன்று பலரும் உடல் பருமனுக்கு அடுத்தப்படியாக தலைமுடி பற்றிய கவலையில் உள்ளனர். பலர் தலைமுடி உதிர்வால் தங்களின் தலைமுடியை இழந்து வருகிறார்கள். தலைமுடி உதிர்வதற்கு மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை முக்கிய காரணமாக உள்ளது.
மோசமான உணவுப் பழக்கங்களால் உடலுக்கு மட்டுமின்றி தலைமுடிக்கும் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் முடி வலிமைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், தலைமுடி கொத்து கொத்தாக உதிர ஆரம்பிக்கிறது.
நீங்கள் இதுப்போன்று தலைமுடி உதிர்வால் அவதிப்படுகிறீர்கள் என்றால், ஒரு விஷயத்தை தினமும் தவறாமல் செய்யுங்கள் போதும். அது என்னவென்றால் ஒருசில உணவுப் பொருட்களை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதனால் தலைமுடியின் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இப்போது தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய பொருட்கள் எவையென்பதைக் காண்போம்.
கறிவேப்பிலை தலைமுடிக்கு சிறந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் கறிவேப்பிலையில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளதால், இது தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். அதற்கு 3-4 கறிவேப்பிலை இலைகளை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதனால் ஓரிரு நாட்களில் தலைமுடியில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
ஆளிவிதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஏராளமான அளவில் உள்ளது. எனவே இது தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். அதற்கு ஆளிவிதையை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, அந்நீரை மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆளிவிதை பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.
இளநீர் இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம். இது தலைமுடி, சருமம் மற்றும் வயிற்றின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தலையில் போதுமான ரத்த ஓட்டம் இல்லாவிட்டால் தான் தலைமுடி உதிரும். ஆனால் இளநீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் இரத்த ஓட்டம் மேம்பட்டு, தலைமுடியும் வலுவாகும்