Advertisement

ஆண்களே...வயிறை தட்டையாக வைத்திருக்க உதவும் சூப்பர் டிப்ஸ்!

By: Monisha Sat, 20 June 2020 6:31:07 PM

ஆண்களே...வயிறை தட்டையாக வைத்திருக்க உதவும் சூப்பர் டிப்ஸ்!

அழகில் முக்கிய இடம் பிடிப்பது வயிறை தட்டையாக வைத்திருப்பதுதான். ஆண்கள் தொப்பை இல்லாமல் இருப்பதை தான் விரும்புகிறார்கள். அதுமட்டுமல்லாது பெண்களுக்கும் தொப்பை இல்லாத ஆண்களை தான் அதிகம் பிடிக்கும். ஆண்களே, வயிறை தட்டையாக வைத்திருக்க வெறும் உடற்பயிற்சி மட்டும் போதாது, உணவை சரியாக தேர்ந்தெடுத்து உண்பது மிக அவசியம். எனவே உணவை எவ்வாறு உண்பது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்!

கார்போஹைட்ரேட்
பொதுவாக கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள், ஆனால் அதற்காக கார்போஹைட்ரேட்டை முற்றிலுமாக தவிர்க்க கூடாது. ஏனெனில் இது தசைகளின் வலிமையை கிளைகோஜனின் சுரப்பை தடுக்கும். தொடர்ந்து இயங்கும் உங்களின் தசைகள் சீராக இயங்க அவற்றிற்கு தொடர்ச்சியான ஆற்றல் தேவை, அவை கார்போஹைரேட்டிலிருந்து கிடைக்கிறது.

men,flat stomach,carbohydrates,protein,exercise ,ஆண்கள்,தட்டை வயிறு,கார்போஹைட்ரேட்,புரோட்டின்,உடற்பயிற்சி

புரோட்டின்
உடல் வலிமைக்கு அடிப்படையான சத்து என்றால் அது புரோட்டின்தான். உங்கள் உணவில் அதிகளவு புரோட்டினை சேர்த்து கொள்வது உங்கள் தசைகளை வலிமையாக்குவதுடன் கொழுப்பை எரிக்கவும் உதவும். உங்கள் தசைளை வலிமையாக்குவதில் மற்ற ஊட்டச்சத்துக்களை விட புரோட்டின்கள்தான் அதிக பலனளிக்க கூடியவை. உடலில் இருக்கும் கலோரிகளை எரிப்பதில் புரோட்டினின் பங்கு மிகவும் முக்கியமானது.

கொழுப்புகள்
உங்கள் உணவில் ஆரோக்கியமான கொழுப்புகளை சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம். உடலுக்கு வலுசேர்க்கும் நிறைவுறா கொழுப்புகள் அவகேடா, ஆலிவ் எண்ணெய், மீன் போன்ற பொருட்களில் உள்ளது. இந்த பொருட்களில் இருந்து கிடைக்கும் கொழுப்புகள் உங்கள் உடலில் இன்சுலின் அளவை சீராக வைத்திருக்கும். வயிறை தட்டையாக வைத்திருக்கவும், சிக்ஸ் பேக் வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இருந்தால் நிச்சயம் இந்த கொழுப்புகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அடிக்கடி சாப்பிட வேண்டும்.

men,flat stomach,carbohydrates,protein,exercise ,ஆண்கள்,தட்டை வயிறு,கார்போஹைட்ரேட்,புரோட்டின்,உடற்பயிற்சி

எப்போது சாப்பிட வேண்டும்
பெரும்பாலும் அனைவரும் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த உணவு முறையை பின்பற்றுபவது எடை குறிப்பிற்கும், சிக்ஸ் பேக் வைக்கவும் எந்த வகையிலும் உதவாது. கெட்ட கொழுப்புகள் மற்றும் இனிப்பு தவிர்த்து ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது உங்களின் ஈரல் மற்றும் தசைகளை வலிமையாக்க உதவும்.

டயட்டில் கவனம் தேவை
அதிக கொழுப்புகளை எரித்து தசைகளை வலிமைப்படுத்த உங்கள் டயட் மற்றும் சாப்பிடும் அளவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உங்கள் உணவை கார்போஹைட்ரேட், புரோட்டின் மற்றும் கொழுப்புகள் கொண்டு சரியான அளவில் நிரப்பவும். இது உங்கள் உடலில் அதிக எடை சேர்வதை தடுக்கும்.

men,flat stomach,carbohydrates,protein,exercise ,ஆண்கள்,தட்டை வயிறு,கார்போஹைட்ரேட்,புரோட்டின்,உடற்பயிற்சி

உடலுக்கான எரிபொருள்
உடற்பயிற்சிக்கு முன்னாடியும் சரி, பின்னாடியும் சரி நீர்சத்துக்களை உடலில் சேர்த்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய தொடங்குவதற்கு முன் பெர்ரி, தயிர் ஆகியவற்றை சேர்த்து அதனுடன் வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். இது உங்களுக்கு அதிக உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றலை வழங்கும். அதேபோல உடற்பயிற்சி சாப்பிட்டு முடித்த பிறகு சிக்கன், காய்கறிகள், சர்க்கரைவள்ளி கிழங்கு போன்றவற்றை சாப்பிடுங்கள்.

சாப்பிடும் பழக்கம்
உங்கள் நாளை எப்பொழுதும் அதிகமான உணவுடன் தொடங்குங்கள். நார்ச்சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டை அதிகம் சேர்த்து கொள்ளுங்கள், இது உங்களுக்கு தேவையில்லாமல் பசி ஏற்படுவதை தடுக்கும். நாளின் கடைசி உணவானது நிச்சயமாக கார்போஹைட்ரேட் இல்லாமல் புரோட்டின் அதிகம் உள்ள உணவாக இருக்க வேண்டும்.

Tags :
|