Advertisement

கவர்ச்சியாக தோற்றமளிக்க விலையுயர்ந்த பேஸியல்கள் தேவையில்லை!

By: Monisha Tue, 16 June 2020 12:09:08 PM

கவர்ச்சியாக தோற்றமளிக்க விலையுயர்ந்த பேஸியல்கள் தேவையில்லை!

நீங்கள் கவர்ச்சியாக தோற்றமளிக்க விலையுயர்ந்த பேஸியல்கள் அல்லது காஸ்மெடிக்ஸ் தேவையில்லை. எனினும், இந்த காலக்கட்டத்தில் வயதாவதை குறைத்து காட்டுவதே அழகு என்று கருதப்படுகிறது. இதோ நீங்கள் கவர்ச்சியாக தோற்றமளிக்க உதவும் எளியை வழிமுறைகள்.

நீங்கள் எங்கே இருந்தாலும், உங்களுடைய கண்கள், பாதங்கள் மற்றும் கைகளின் அசைவுகளை நடனமாடுவது போல திடீரென அசைக்கவும். ‘நீங்கள் உங்களுடைய கண்களை சற்றே அசைக்கும் போதும் அல்லது பாரம்பரிய நடனம் போல கைகளை அசைக்கும் போதும், உங்கள் மனம் உடலின் இந்த உன்னத அசைவுகளை ஆர்ப்பரிப்புடன் வாழ்த்தும்’ என்று பிரபல நடனக் கலைஞான கீதா சந்திரன் சொல்கிறார்.

beauty,glamor,dancing,yoga,smiling ,அழகு,கவர்ச்சி,நடனம்,யோகா,புன்னகை

நீங்கள் சோர்வாக இருந்தால், உங்களைப் பற்றி குறைவாக எண்ணுகிறீர்கள் என்று பொருள். நாற்காலிகளில் நேராக உட்காருபவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர். எனவே நேராக நடந்து, உயரமாக உட்காருங்கள்.

யோகாசனங்களை தொடர்ந்து செய்யத் துவங்குவதன் மூலம் உங்களுடைய உடலை விழிப்படையச் செய்யவும், மனம் மற்றும் உடலை ஒருமுகப்படுத்தவும் முடியும். யோகாசனம் உங்களுடைய மனம் மற்றும் உடல் இரண்டிலும் புதிய அழகை உணர செய்யும்.

நீங்கள் ஒரு இடத்தில் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக அமர்ந்திருந்தால், வெளியேறி வாருங்கள். மெதுவாக நடந்து கொண்டே உங்களுக்குப் பிடித்த ஒரு பாட்டை பாடத் தொடங்குங்கள். நமக்குப் பிடித்த ஒரு சுறுசுறுப்பான பாடலை பாடுவது சிறந்த சக்தியைத் தரும். உங்களுடைய குரலை உயர்ந்த தொனியில் கேட்பதால், உங்களுக்கும் சற்றே ஆறுதலாக இருக்கும்.

beauty,glamor,dancing,yoga,smiling ,அழகு,கவர்ச்சி,நடனம்,யோகா,புன்னகை

கண்ணாடிக்கு முன் சென்று லேசாக சிரிக்கத் தொடங்குங்கள். உங்கள் உதடு விரிவதை கண்ணாடியில் நீங்கள் பார்க்கும் போது நீங்கள் மகிழ்ச்சியை உணருவதுடன், மன அழுத்தம் குறைவதையும் உணருவீர்கள். ஒருமுறை புன்னகை செய்யும் போது உங்கள் உடலில் ஏற்படும் இரசாயன மற்றும் உடல் ரீதியான மாற்றங்கள், உங்களுடைய உடலில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்டோர்பின்ஸ்களை உற்பத்தி செய்ய முடியும்.

Tags :
|
|
|