Advertisement

பெண்கள் முகத்தில் ஆங்காங்கே உள்ள முடிகளை எளிமையாக நீக்கும் வழிமுறைகள்

By: Karunakaran Mon, 28 Sept 2020 4:00:54 PM

பெண்கள் முகத்தில் ஆங்காங்கே உள்ள முடிகளை எளிமையாக நீக்கும் வழிமுறைகள்

சில பெண்கள் முகத்தில் ஆங்காங்கே முடிகள் தென்படும். இத்தகைய முடி வளர்ச்சியை வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டு எளிமையாக நீக்கிவிடலாம். அகன்ற பாத்திரத்தில் இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதித்துவந்ததும் இறக்கி ஆறவிடவும். மிதமான சூட்டில் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்துவர வேண்டும். அடிக்கடி இவ்வாறு செய்துவந்தால் வளரும் முடி உதிர தொடங்கிவிடும்.

வாழைப்பழத்துடன் ஓட்ஸையும் பயன்படுத்தலாம். இரண்டு டேபிள்ஸ்பூன் ஓட்ஸை மிக்சியில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக்கொள்ளவேண்டும். அதனுடன் வாழைப்பழத்தையும், சிறிதளவு தேனையும் சேர்த்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும். அதை முகத்தில் நன்றாக பூசி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால் முடி வளர்வது தடைபடுவதுடன் சருமமும் பொலிவுடன் தோற்றமளிக்கும்.

remove,hair,scalp,women face ,அகற்றுதல், முடி, உச்சந்தலை, பெண்கள் முகம்

ஆரஞ்சு தோலை நிழலில் உலரவைத்து பொடித்துக்கொள்ளவும். அதனுடன் தலா ஒரு டேபிள்ஸ்பூன் பாசி பயிறு மாவு, சிறிதளவு சந்தன பவுடர் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் ரோஸ்வாட்டர், எலுமிச்சை சாறு போன்றவைகளை கலந்து நன்றாக குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து கால் மணி நேரம் உலர வைத்துவிட்டு கழுவிவிடலாம்.உருளைக்கிழங்கும், கடலைமாவும் முகத்தில் முடி வளர்வதை தடுத்து நிறுத்திவிடும் தன்மை கொண்டவை.

கடலை மாவு, உருளைக்கிழங்கு சாறு, எலுமிச்சை சாறு, தேன் ஆகியவைகளை கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவிவிடலாம். முட்டையின் வெள்ளைக்கருவில் சோள மாவு, சர்க்கரை போன்றவைகளை சேர்த்து நன்றாக கலக்கவும். அதனை முகத்தில் பூசி கால் மணி நேரம் உலரவைத்துவிட்டு முகத்தை கழுவிவிடலாம். வாரம் மூன்று முறை செய்து வந்தால் முகத்தில் முடி வளர்வது நீங்கும்.


Tags :
|
|
|