Advertisement

காசு செலவழிக்காமல் முகம் அழகு பெற... வாழைப்பழ தோலை பயன்படுத்தலாம்!

By: Monisha Tue, 17 Nov 2020 3:08:29 PM

காசு செலவழிக்காமல் முகம் அழகு பெற... வாழைப்பழ தோலை பயன்படுத்தலாம்!

கடையில் காசு கொடுத்து வாங்கும் அத்தனை பொருட்களும் நமது அழகை கெடுத்து தோல் செல்களை சேதப்படுத்துகின்றன. ஆனால் நாம் குப்பையில் போடும் வாழைப்பழ தோல் அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட பொருளாகும். இது பெரும்பாலும் பயனற்றதாக கருதப்படுகிறது. ஆனால் அப்படிபட்ட வாழைப்பழ தோலை பயன்படுத்துவதன் மூலம், காசு செலவழிக்காமல் முகப்பரு மற்றும் முக சுருக்கங்களில் இருந்து விடைபெறலாம்.

வாழைப்பழ தோலில் லுடீன் அதிகமாக உள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் கரோட்டினாய்டு வைட்டமின் உள்ளது. வாழைப்பழ தோலில் உள்ள லுடீன் சூரிய கதிர்களால் ஏற்படும் பாதிப்பை குறைத்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் வாழைப்பழத்தில் எஸ்டெரிஃபைட் கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை நம்முடைய சருமத்திற்க்கு பயன்படுத்தும் லோஷன்களில் அடிப்படை பொருளாக பயன்படுகிறது.

வாழைப்பழ தோலை பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் முகப்பருவை குறைக்கலாம் மற்றும் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை குறைக்கலாம். இதில் வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ, பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு மற்றும் மாங்கனீசு ஆகிய சத்துகள் உள்ளன. இந்த சத்துகள் நம்முடைய சருமத்தில் ஏற்க்கனவே இருக்க கூடிய முகப்பரு தழும்புகளைக் கூட குறைக்கும்.

banana skin,face,natural,acne,facial wrinkles ,வாழைப்பழ தோல்,முகம்,இயற்கை,முகப்பரு,முக சுருக்கம்

அதுமட்டுமல்லாமல் இது உங்கள் சருமத்திற்கு மென்மையான தோற்றத்தை அளிக்கிறது. ஆகவே நீங்களும் உங்கள் சருமத்தை அழகாகவும் இளமையாகவும் வைத்திருக்க விரும்பினால் செலவே இல்லாத இந்த முறையை பாலோவ் பண்ணுங்க.

முதலில், உங்கள் சருமத்தில் படிந்திருக்கும் எண்ணெய் மற்றும் அழுக்கை சோப்பை பயன்படுத்தி சுத்தம் செய்யவும். சுத்தம் செய்த பின் ஒரு பழுத்த வாழைப்பழ தோலை எடுத்து அதன் உள் பகுதியை உங்கள் முகத்தில் நேரடியாக 10 முதல் 15 நிமிடங்கள் வாழைப் பழ தோல் கருப்பு நிறமாக மாறுவது வரை செய்யவும். இதை இரவு நேரங்களில் பண்ணுங்கள்.

ஏனென்றால் இதை அப்ளை செய்த பின் உங்கள் முகத்தை குறைந்தது 4-5 மணி நேரம் கழுவாமல் வைத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தை தாண்டிய பின்னர் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இப்படி செய்து வர முகப்பரு மற்றும் ஏற்க்கனவே உங்கள் முகத்தில் காணப்பட்ட தழும்புகள் நீங்கி முகம் அழகு பெறும்.

Tags :
|
|