Advertisement

குளிர் காலங்களில் ஏற்படும் சரும வறட்சியை போக்க..!

By: Monisha Tue, 15 Dec 2020 11:33:06 AM

குளிர் காலங்களில் ஏற்படும் சரும வறட்சியை போக்க..!

குளிர் காலங்களில் சருமம் மிகவும் உலர்ந்து போய் காணப்படும். இதனை சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டால், சருமம் மேலும் மேலும் காய்ந்து போய் வெடிப்புகள் தோன்றி விடும். இந்த பதிவில் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க சில எளிய இயற்கை குறிப்புகள் கொடுக்க்கப்பட்டுள்ளது.

குளிர் காலங்களில் விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலவையைப் பயன்படுத்துவது உலர்ந்து போன சருமத்திற்கு நல்லது. 3 பங்கு ஆலிவ் எண்ணெயுடன் ஒரு பங்கு விளக்கெண்ணெயைக் கலந்து முகத்தில் தடவி, பின்னர் சுடுநீரில் நனைத்து பிழிந்த சூடான டவல் கொண்டு நன்றாகத் துடைத்து எண்ணெயை நீக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். அதிலும் இந்த எண்ணெய்க் கலவையை சிறிது கொதிக்க வைத்து உபயோகித்தால் அதிக பலன் கிடைக்கும். சருமம் மிருதுவாகும்.

உலர்ந்த சருமத்திற்கு தேன் ஒரு அருமருந்தாகும். தேனுடன் ஆரஞ்சுச் சாற்றைக் கலந்து சருமத்தில் தேய்க்க வேண்டும். பிறகு, ஒரு 10 நிமிடங்கள் கழித்து தேய்த்த பாகங்களை நன்றாகக் கழுவினால் சருமம் பட்டுப் போல் பளிச்சிடும். சருமத்திலுள்ள சுருக்கங்களும் நீங்கியிருக்கும்.

winter,dry skin,beauty,natural,oily ,குளிர் காலம்,வறண்ட சருமம்,அழகு,இயற்கை,எண்ணெய்

சருமத்தில் ஏற்படும் கோடுகளையும், சுருக்கங்களையும் போக்குவதில் கடலை மாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. 2 ஸ்பூன் கடலை மாவுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு பால் ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது எலுமிச்சைச் சாற்றையும் கலந்து நன்றாகப் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் இந்தக் கலவையை சருமத்தில் பூசி, சிறிது நேரம் உலர வைக்கவும். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சருமம் பளிச்சென்று மாறும்.

தோல் நீக்கப்பட்ட 2 வாழைப்பழங்களை மிக்ஸியில் நன்றாக அரைத்து அல்லது கைகளினாலேயே நன்றாக மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை முகத்தில் நன்றாகத் தடவி, ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும்.

2 ஸ்பூன் தயிருடன் தேனைக் கலந்து, முகத்தில் பூச வேண்டும். பின், ஒரு மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவினால் சருமம் மிருதுவாகும்.

Tags :
|
|