Advertisement

இயற்கை முறையில் கரும்புள்ளிகளை நீக்க..!

By: Monisha Fri, 06 Nov 2020 6:06:40 PM

இயற்கை முறையில் கரும்புள்ளிகளை நீக்க..!

முக அழகை கெடுக்கும் கரும்புள்ளிகளை இயற்கை முறையில் நீக்க இந்த குறிப்புகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட்செய்து கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி விடும்.

முட்டையின் வெள்ளைக்கருவைப் பயன்படுத்தி முகத்திற்கு மாஸ்க் போட்டால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி, கரும்புள்ளிகளைப் போக்கும்.

nature,face,beauty,blackheads,potatoes ,இயற்கை,முகம்,அழகு,கரும்புள்ளி,உருளைக்கிழங்கு

தண்ணீரை தினமும் போதிய அளவில் குடித்து வருவதன் மூலம், உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறும். மேலும் தினமும் முகத்தை 3 முறை கழுவி வரவேண்டும். இதனாலும் முகத்தில் அழுக்குகள் தங்குவதைத் தடுக்கலாம்.

உருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்த்த பின்னர் காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும்.

கொத்துமல்லி மற்றும் மஞ்சள் கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட்செய்து முகத்தில் தடவி காயவைத்து கழுவ வந்தால் கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.

Tags :
|
|
|