Advertisement

தொடை பகுதியில் இருக்கும் கருமையை நீக்க..!

By: Monisha Wed, 14 Oct 2020 2:39:30 PM

தொடை பகுதியில் இருக்கும் கருமையை நீக்க..!

இயற்கையான முறைகளில் கருமையை நீக்கி வெண்மையாக்க பல வழிமுறைகளை கையாளும் நாம் கழுத்து மற்றும் அந்தரங்க பகுதியான தொடை இடுக்கு பகுதியில் இருக்கும் கருமையை நீக்கி அவ்விடத்தை எப்படி வெண்மையாக மாற்றலாம் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தக்காளி
தக்காளியில் உள்ள லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்சிடென்ட், சூரியனால் சருமம் பாதிக்க படுவதை தடுக்கும். இது சரும கருமையை போக்கும் சக்தி கொண்டது. ஒரு துண்டு தக்காளியை எடுத்து கருமையான இடத்தில் தேய்த்து 25 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். 25 நிமிடங்கள் கழித்த பிறகு கழுவி விட வேண்டும். இப்படி தினமும் தேய்க்க வேண்டும். இப்பொழுது கருமை நிறம் மறைய தொடங்கும்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் விட்டமின் ஏ உள்ளது. இது சருமத்தில் மெலனின் உற்பத்தியை கட்டுப்படுத்தி, சரும கருமையைக் குறைக்கும். மேலும் வெள்ளரிக்காயில் உள்ள நீர்சத்து சரும வறட்சியை தடுத்து, சரும பொலிவை மேம்படுத்தும். வெள்ளரிக்காயில் 'ப்ளீச்சிங்' பண்புகள் உள்ளது. இதனால் இது சரும பொலிவை தரும். வெள்ளரிக்காயை மிக்சியில் அடித்து, அந்த சாறுடன் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது மஞ்சள் தூள் கலந்து, கழுத்து மற்றும் அந்தரங்க பகுதியான தொடை இடுக்கு பகுதியில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் கருமை மாறி நல்ல பலன் கிடைக்கும்.

tomatoes,cucumbers,cactus,lemons,black skin ,தக்காளி,வெள்ளரிக்காய்,கற்றாழை,எலுமிச்சை,கருமை

கற்றாழை
கற்றாழை ஜெல்லை எடுத்து 2 முறை நன்றாக கழுவி விட்டு அதனை அப்படியே நேரடியாக கருமையாக இருக்கும் இடத்தில் தடவி 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனை தவறாது செய்ய வேண்டும். ஏனெனில் கற்றாழை சரும கருமையைப் போக்கும் ஒரு அற்புத பொருளாகும். மட்டுமல்லாது கற்றாழை பாதிக்கப்பட்ட சரும செல்களை புதுப்பிக்கும் தன்மை கொண்டதாகும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கருமையான இடம் வெண்மையாகி நல்ல பொலிவை தரும்.

எலுமிச்சை
எலுமிச்சையில் விட்டமின் சி உள்ளது. இது ப்ளீச்சிங் பண்புகள் கொண்டதாகும். எலுமிச்சையில் உள்ள விட்டமின் சி சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சரும நிறத்தை மேம்படுத்தி, புதிய செல்களின் உருவாக்கத்தையும் தூண்டும். எனவே எலுமிச்சை சாறை கருமையான கழுத்து மற்றும் அந்தரங்க பகுதியான தொடை இடுக்குகளில் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படியே செய்து வந்தால் கருமையான நிறம் நீங்கி அவ்விடம் வெண்மையாகும்.

Tags :
|
|