Advertisement

வறண்ட கூந்தல் பொலிவாக மாற...கடுகு எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க!

By: Monisha Sat, 29 Aug 2020 1:11:03 PM

வறண்ட கூந்தல் பொலிவாக மாற...கடுகு எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க!

கூந்தல் வறண்டு போவதால் கூந்தல் உதிர்வு, பிளவு, கூந்தல் வளர்ச்சி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். கூந்தலும் பொலிவிழந்து போய் முரடாக மாற ஆரம்பித்து விடும். வறண்ட கூந்தலால் ஏற்படும் அரிப்பு போன்றவற்றை இந்த எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்து சரி செய்யலாம். தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.

ஒரு கப்பில் கடுகு எண்ணெய் மற்றும் முட்டை வெள்ளை கருயை சேர்த்து நன்றாக கலக்கவும். அதை தலையில் தடவிக் கொள்ளுங்கள். ஒரு சுத்தமான துணி எடுத்து அதை சூடான நீரில் நனைத்து கொள்ளுங்கள். இப்பொழுது அதை தலையில் கட்டி 30-40 நிமிடங்கள் வைக்கவும். பிறகு மைல்டு ஷாம்பு கொண்டு அலசுங்கள். இப்படி செய்து வந்தால் சீக்கிரமே வறண்ட கூந்தல் பொலிவாக மாறும். கூந்தல் அழகு பெறும்.

dry hair,beauty,mustard oil,eggs,blood circulation ,வறண்ட கூந்தல்,அழகு,கடுகு எண்ணெய்,முட்டை,இரத்த ஓட்டம்

கடுகு எண்ணெய் தேங்காய் எண்ணெயைவிட சற்று அடர்த்தி அதிகம் என்பதால் அதில் பிசுபிசுப்புத் தன்மையும் அதிகமாக இருக்கும். சாதாரணமாக தலைக்கு தேங்காய் எண்ணெய் அப்ளை செய்வது போல் அப்ளை செய்து கொள்ளலாம்.

வெளியில் செல்பவர்களாக இருந்தால், இரண்டு ஸ்பூன் கடுகு எண்ணெயை ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயையுடன் கலந்து லேசாக சூடு செய்து தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் நுனி வரையிலும் நன்கு அப்ளை செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். ஒரு வாரம் தொடர்ந்து இதை செய்து வருவதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

Tags :
|
|