Advertisement

கோடையில் கூந்தலை பராமரிக்க உதவும் முக்கிய குறிப்புகள்!

By: Monisha Wed, 20 May 2020 5:33:43 PM

கோடையில் கூந்தலை பராமரிக்க உதவும் முக்கிய குறிப்புகள்!

1)தலைக்கு ஷாம்பு போடும் போது, ஸ்கால்ப்பில் இருக்கும் அழுக்குகளை நீக்க மசாஜ் செய்ய மறந்திட வேண்டாம். குறைந்தது 2 முதல் 3 நிமிடங்களாவது மசாஜ் செய்யவும். மசாஜ் செய்யும் போது தவறியும் நகங்களை பயன்படுத்தி விடாதீர்கள்.

2)தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி மெதுவாக மட்டுமே மசாஜ் செய்ய வேண்டும். நேரம் ஆகிவிட்டது என்று வேகமாக தேய்த்தால், முடி சுத்தமாவதற்கு பதிலாக வலுவிழந்துவிடும்.

3)அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், இருமல், தும்மல் அல்லது அசுத்தமான பகுதி ஏதாவதை தொட நேரலாம். அடிக்கடி கையானது முடிக்கு தான் செல்லும். நீங்களே நினைக்கா விட்டாலும் கூட கை முடிக்கு செல்வதை தவிர்க்க முடியாது. எனவே, தூசுக்கள் போன்றவை கூந்தலை அண்டாமல் இருக்க அடிக்கடி கைகளை கழுவுங்கள்.

4)மிதமான கெமிக்கல் உள்ள ஷாம்புக்களை மட்டுமே கூந்தலுக்கு பயன்படுத்த வேண்டும். கெமிக்கல் அதிகம் நிறைந்த ஷாம்பு கூந்தலை சேதப்படுத்தக்கூடும். மேலும், அவை கூந்தலை வறட்சி அடையாமலும், துளைகளை அடைக்காமலும் பார்த்துக் கொள்ளும்.

to maintain hair,summer,shampoo,conditioner,hair dryer ,கூந்தலை பராமரிக்க, கோடை காலம்,ஷாம்பு,கண்டிஷ்னர்,ஹேர் ட்ரையர்

5)கண்டிஷ்னர் போடுவதை ஒருபோதும் தவிர்த்திட வேண்டாம். ஏனென்றால், மிருதுவான கூந்தல் மற்றும் சிக்குகள் அற்ற கூந்தலை பெறவும், கூந்தல் உடைவதை தவிர்க்கவும் கண்டிஷனர் மிகவும் உதவக்கூடியது.

6)கூந்தலை அலசிய பின்னர், காற்றில் காய வைத்தால் மட்டுமே கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். ஹேர் ட்ரையர் பயன்படுத்துவது சொந்த செலவில் முடியை சேதப்படுத்திக் கொள்வதாகும்.

7) கோடைக்காலங்களில் வாரத்திற்கு 2-3 முறை கூந்தலை அலச வேண்டியது அவசியம். மேற்கூறிய முறைகளின் படி கூந்தலை அலசி வந்தால், கோடையிலும் முடி சுத்தமாக இருக்கும்.

8) வெயிலில் செல்வதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. அப்படியும் தவிர்க்க முடியவில்லை என்றால், வெயிலில் வெளியே சென்றாலோ அல்லது நீண்ட நேரம் வெயிலில் வேலை இருந்தாலோ, தலையை ஒரு துணி கொண்டு மறைத்து கட்டிக் கொள்வது நல்லது. ஏனென்றால், நேரடி சூரிய ஒளி மற்றும் காற்று தூசு போன்றவை தலை முடிகளின் மீது படும் போது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

Tags :
|