Advertisement

பருக்களால் தொல்லையா... எளிய இயற்கை முறையில் தீர்வு காணலாம்

By: Nagaraj Fri, 07 Oct 2022 10:23:50 PM

பருக்களால் தொல்லையா... எளிய இயற்கை முறையில் தீர்வு காணலாம்

சென்னை: பருவ வயதில் பருக்கள் என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடியதுதான். பருக்கள் வருவதற்கு எண்ணெய் பதார்த்தங்களும் ஒரு காரணம் என்பதால் அவற்றை பருவ வயதினர் தவிர்த்தல் நல்லது.

பால் பொருட்களும் முகப்பருக்களை உண்டாக்குகின்றன. பால், ஐஸ் கிரீம் என எதுவானாலும் அவை இன்சுலின் போன்ற IGF-1 என்ற ஹார்மோனை சுரக்கச் செய்கின்றன. இது முகப்பருக்கள் வருவதைத் தூண்டி அதிகரிக்கச் செய்கிறது. அதேபோல், ஜங் ஃபுட்ஸ், எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவுகள், கொழுப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவையும் பருக்களுக்கு காரணமாக இருக்கின்றன.

எனவே இதுபோன்ற உணவுகளை தினசரி உணவுப் பழக்கத்திலிருந்து குறைத்துக் கொண்டாலே முகப்பருக்கள் வருவதை தவிர்க்க தீர்வாக இருக்கும். பருக்கள் வராமல் தடுக்க வேப்பிலை, துளசி, புதினா ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அரைத்து முகத்தில் பூசி, உலரவிட்டு பின்னர் முகத்தை கழுவி வரலாம்.

snacks,acne,basil leaves,neem oil,medicine ,தின்பண்டங்கள், முகப்பரு, துளசி இலை, வேப்பிலை கொழுந்து, மருந்து

பருக்கள் வராமல் தடுக்க இன்னொரு முறையும் உள்ளது. மருந்து கடைகளில் கிடைக்கும் ரத்த சந்தனம் என்ற பொருளை வாங்கி மணத்தக்காளி சாற்றை சேர்த்து துளசி இலை, வேப்பிலைக் கொழுந்து ஆகியவற்றை அரைத்து கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழிந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிட வேண்டும். பருக்களை கிள்ள கூடாது.

தேவைக்கு அதிகமாக முகத்தில் கிரீம் போடக்கூடாது. அதிக இனிப்பு, கொழுப்பு உள்ள தின்பண்டங்களை தவிர்க்க வேண்டும். அடிக்கடி முகம் கழுவ கூடாது.

Tags :
|
|