Advertisement

வழுக்கை விழுந்த இடத்தில் கூட புதிய முடிகள் முளைக்க இதை ட்ரை பண்ணி பாருங்க

By: vaithegi Sun, 06 Aug 2023 3:19:29 PM

வழுக்கை விழுந்த இடத்தில் கூட புதிய முடிகள் முளைக்க  இதை ட்ரை பண்ணி பாருங்க

முடி உதிர்வு பிரச்சனை என்பது இன்றைய காலத்தில் அனைவருக்கும் இருப்பது தான் ஒரு சிலருக்கு கொஞ்சமாகவும் ஒரு சிலருக்கு அதிகமாகவும் ஒரு சிலருக்கு தலையில் சுத்தமாக முடியே இல்லாமல் சொட்டை விழும் அளவிற்கு உதிர்ந்து விடும். இந்த முடி உதிர்வு பிரச்சனையை ஆரம்ப காலத்தில் சரி செய்யா விட்டால் நாலடைவில் மொத்தமாக உதிர்ந்து தலை சொட்டை ஆகி விடும்.

பொதுவாக முடி உதிர்வு என்பது சாதாரணமான ஒன்று தான். ஒரு நாளைக்கு 50 முடிகள் வரை உதிர்வது மிகவும் இயல்பு தான். அதே போல குறிப்பிட்ட வயதிற்கு மேல் நிச்சயமாக முடி உதிரும். இதையெல்லாம் சரி செய்ய நம் வீட்டு சமையலுக்கு பயன்படுத்தும் சின்ன வெங்காயம் இருந்தாலே போதும். இந்த முடி உதிர்வு முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரி செய்து விடும்.

முடி உதிர்த்து சொட்டையான இடத்தில் கூட புதிய முடிகளை வளர வைக்கக் கூடிய தன்மை இந்த சின்ன வெங்காயத்திற்கு உண்டு. இந்த சின்ன வெங்காயத்தில் இருக்கும் சல்பர் என்ற வேதிப் பொருள் நம்முடைய தலைமுடியில் உள்ள பிரச்சனைகளான பூச்சி வெட்டு தலையில் ரத்த ஓட்டம் இன்மை முடி வறட்சி பொடுகு பேன் இப்படியான அனைத்தையும் இது ஒன்றே சரி செய்து விடும்.

hair,baldness ,முடிகள் ,வழுக்கை


இந்த பேக் தயாரிக்க ஒரு பத்து சின்ன வெங்காயத்தை தோலுரித்து எடுத்து மிக்ஸியில் போட்டு நல்ல நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இதன் சாறை மட்டும் தனியாக பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாறை தலையில் தேய்த்து 10 நிமிடம் வரை மசாஜ் செய்த பிறகு அரை மணி நேரத்திலிருந்து 1 மணி நேரம் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு மைல்டான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விடுங்கள். இதை வாரம் 1 முறை தொடர்ந்து செய்யும் போது தலையில் முடி உதிர்வு நிற்பதுடன் புதிய முடிகளும் வளரும்.

இந்த சின்ன வெங்காயத்தை நேரடியாக சேர்க்கும் பொழுது உடலுக்கு ஒத்துக் கொள்ளாது என்று நினைப்பவர்கள் தேங்காய் எண்ணெயை காய வைத்து அதில் அரைத்த விழுதை போட்டு அதன் பிறகு அந்த எண்ணெய் வடிகட்டி பயன்படுத்துங்கள். இந்த பிரச்சனை சரியாகும். இந்த சின்ன வெங்காய சாறூடன் புதினா சாறு அல்லது எலுமிச்சை சாறு போன்றவற்றை கலந்து தேய்க்கும் பொழுதும் இன்னும் கூடுதலான முடி வளர்ச்சியும் முடி உதிர்வையும் தடுக்க முடியும்.இதில் உள்ள ரெமிடிகளில் உங்களால் எதை செய்ய முடியுமோ அதை செய்து கொள்ளலாம் அல்லது ஒரு வாரம் புதினா இலை, அடுத்த வாரம் எலுமிச்சை சாறு என இரண்டும் மாற்றி கலந்தும் தேய்க்கலாம். இதனால் உங்களுடைய முடி உதிர்வு பிரச்சினை சீக்கிரத்தில் முடிவுக்கு வந்து விடும்.

Tags :
|