Advertisement

கண்கள் வறட்சி அடைவதை தவிர்க்க இதை முயற்சி பண்ணுங்க..!

By: Monisha Thu, 18 June 2020 3:58:20 PM

கண்கள் வறட்சி அடைவதை தவிர்க்க இதை முயற்சி பண்ணுங்க..!

ஆண் பெண் ஆகிய இருபாலாருடைய கண்களும் வறட்சி அடைய பல‌ காரணங்கள் இருக்கிறது. பொதுவான காரணங்களாக, அதிகநேரம் கம்யூட்டர் பார்ப்ப‍தும், செல்போன் உபயோகப்படுத்துவதும், அதிக நேரம் படிப்பதுமே. ஆக உங்கள் கண்களில் ஏற்பட்டுள்ள‍ வறட்சியை போக்கி கண்களை பாதுகாக்க‍ என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காண்போம்.

உங்கள் கண்களை பாதுகாக்க ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பதனை உடனே கைவிட வேண்டும். புகை பிடிப்பவர்களின் அருகில் கூட‌ நிற்க வேண்டாம். கண் மருத்துவர் ஆலோசனையின் பெயரில் கண்ணுக்கான சொட்டு திரவம் பயன்படுத்தலாம். கண் சொட்டு மருந்துகளும் தகுந்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

eyes,dryness,computer,cell phone,alcohol ,கண்கள்,வறட்சி,கம்யூட்டர்,செல்போன்,ஆல்கஹால்

தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். டீ, காபி இவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும். வெளியில் செல்லும் பொழுது கண்களை பாதுகாக்க, கறுப்பு கண்ணாடி அணிந்து கொள்ள‍ வேண்டும். கண்களை சுத்தமாக வைத்திருங்கள்.

ஒன்றையே உற்று பார்க்காமல், அடிக்கடி கண்களை சிமிட்ட பழகுங்கள். அதாவது கண்களை மூடி, திறக்க பழகுங்கள். கண்டிப்பாய் ஆறு மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண்ணாடி அணிபவர்கள் 3 மாதத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. போதுமானளவு தூங்க வேண்டும்

Tags :
|