Advertisement

சருமத்தின் கருமை நிறத்தை போக்க இதை பயன்படுத்தி பாருங்கள்

By: Nagaraj Thu, 20 Apr 2023 11:35:51 PM

சருமத்தின் கருமை நிறத்தை போக்க இதை பயன்படுத்தி பாருங்கள்

சென்னை: வெயிலால் சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே செல்கிறது. இதை போக்க எளிய வழிகள் உங்களுக்காக.

தற்போது உலகில் நடக்கின்ற சூரிய அலைத் தாக்கத்தால் உலகம் பூராகவும் வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இதனால் இயற்கை சூழல் மட்டும் பாதிப்படைவதில்லை மாறாக மனிதர்களின் உடலிலும் பாரிய தாக்கம் ஏற்படுகிறது.

அதாவது சருமத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் இதனால் சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே செல்கிறது.

எந்த அளவிற்கு சருமத்தின் நிறத்தை பராமரித்து வைத்திருக்கிறார்களோ அவற்றிற்கெல்லாம் பலன் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இப்பொழுதெல்லாம் பெண்களைப் போன்று ஆண்களும் சரும நிறத்தை பராமரிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்

blackheads,aloe vera gel,facial,massage,remove dark spots ,கரும்புள்ளிகள், கற்றாழை ஜெல், முகம், மசாஜ், கருமை நீங்கும்

அதற்காக பலர் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட பொருட்களை வாங்கி போடுகிறார்கள். இருப்பினும் தற்காலிகம் தான். அந்த வகையில் முகத்தின் கருமை நீங்க சில இயற்கையான பயனுள்ள குறிப்புகளை தெரிந்து கொள்வோம்.

பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும். வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம்.

ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.

கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் அழகாகவும், வெள்ளையாக மாறியிருப்பதையும் காணலாம்.

Tags :
|