Advertisement

முடி பராமரிப்பிற்கு வோட்காவை பயன்படுத்தி பாருங்கள்

By: vaithegi Mon, 13 June 2022 11:46:22 PM

முடி பராமரிப்பிற்கு வோட்காவை பயன்படுத்தி பாருங்கள்

வோட்காவின் குறைந்த பிஹெச் மற்றும் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் முடி பராமரிப்புக்கு பயன்படுத்த ஒரு சிறந்த மூலப்பொருளாக அமைகிறது. உச்சந்தலையின் pH அளவை அதன் அஸ்ட்ரிஜென்ட் பண்புகளுடன் சமநிலைப்படுத்துகிறது. உச்சந்தலையின் ஆரோக்கியத்தை அதிகரித்து, முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது

​சிக்கல்கள் இல்லாத தலைமுடிக்கு வோட்கா:

தேவையான பொருட்கள் :

வோட்கா - 1 டீ ஸ்பூன்
தண்ணீர் -2 கப்

செய்முறை :


இந்த இரண்டு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் கலந்து கொள்ளுங்கள்.

வேலை செய்யும் விதம் :

வோட்கா மயிர்க்கால்களுக்கு ஈரப்பதத்தை அளித்து சிக்கலை போக்குகிறது. வோட்காவின் அஸ்ட்ரிஜெண்ட் பண்புகள் பிளவுபட்ட நுனிகளை சரி செய்கிறது. கூந்தல் சீராக இருப்பதை உறுதி செய்கிறது.

​பொடுகை போக்க வோட்கா

தேவையான பொருட்கள் :

வோட்கா -1/2 கப்
ரோஸ்மேரி -2 டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை :

இந்த இரண்டு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து கொள்ளுங்கள். பிறகு குளிர்ந்த உலர்ந்த இடத்தில் வைத்து 3 நாட்கள் வரை சேமிக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு பிறகு ரோஸ்மேரி வோட்காவின் கலவையை வடிகட்ட முயற்சி செய்யுங்கள். இந்த கலவையில் 1 டேபிள் ஸ்பூன் எடுத்து உச்சந்தலையில் வைத்து மசாஜ் செய்யுங்கள்.1 மணி நேரம் வரை விட்டு விட்டு குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் லேசான ஷாம்பு கொண்டு அலச வேண்டும்.
வாரத்திற்கு 2 முறை இதை செய்து வாருங்கள். பொடுகு நாளடைவில் படிப்படியாக மறையும்.

வேலை செய்யும் விதம் :
வோட்காவும் ரோஸ்மேரியும் இணைந்து உச்சந்தலையில் கிருமி நீக்கம் செய்கிறது. உச்சந்தலையில் உள்ள எண்ணெய் மற்றும் அழுக்குகளை போக்குகிறது. இதனால் பொடுகு குறைகிறது.

Tags :
|
|
|
|