Advertisement

முகம் பளபளப்பாக மாற ஆரஞ்சு பழத்தை இப்படி பயன்படுத்துங்கள்!

By: Monisha Thu, 05 Nov 2020 4:25:17 PM

முகம் பளபளப்பாக மாற ஆரஞ்சு பழத்தை இப்படி பயன்படுத்துங்கள்!

ஆரஞ்சு பழம் அழகு சேர்க்க கூடிய ஒரு பொருளாகும். இந்த ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகளவில் காணப்படுகிறது. இந்த பதிவில் முகம் பளபளப்பாகவும், பிரகாசமாகவும் மாற ஆரஞ்சு பழத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

ஆரஞ்சு தோலை அரைத்து விழுதாக்கி கொள்ள வேண்டும். இந்த அரைத்தவிழுது – 1/4 ஸ்பூன், கசகசா விழுது – 1 ஸ்பூன், சந்தன பவுடர் – 1 ஸ்பூன் இவற்றை எல்லாம் சேர்த்து கலந்து ஒரு கெட்டியான விழுதாக்கி கொள்ளுங்கள்.

இதனை தினமும் தூங்கப் போகும் முன் பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசி கொள்ள வேண்டும். பின் காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இதனை செய்தால் வடு மறைவதுடன், மேலும் பருக்கள் வருவதும் நின்று விடும்.

orange fruit,face,beauty,sandalwood,natural ,ஆரஞ்சு பழம்,முகம்,அழகு,சந்தனம்,இயற்கை

உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், கடலை பருப்பு, பயற்றம் பருப்பு, கசகசா இவை ஒவ்வொன்றும் 100 கிராம் வீதம் எடுத்து பொடித்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும்.

முகத்தில் உள்ள கருமை போக வேப்பங்கொழுந்து – 1, ஆரஞ்சு தோல் விழுது – 1/4 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – 1/ 4 ஸ்பூன் கலந்து முகத்தில் நன்றாக பூசி கொள்ளுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள். இதை வாரம் இரு முறை செய்து வந்தால், உங்கள் முகம் பளபளப்பாகவும், பிரகாசமாகவும் ஜொலிக்கும்.

Tags :
|
|