Advertisement

சந்தனப் பவுடரை பயன்படுத்தி முகத்தில் உள்ள கருமைகளை போக்குங்கள்!!!

By: Nagaraj Sat, 29 July 2023 8:23:20 PM

சந்தனப் பவுடரை பயன்படுத்தி முகத்தில் உள்ள கருமைகளை போக்குங்கள்!!!

சென்னை: சந்தனத்தைக் கொண்டு முகத்திற்கு பேஸ் பேக் போட்டு வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாகவும், பொலிவோடும், பிரகாசமாகவும் இருக்கும்.

இதற்கு சந்தனத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். சந்தனப் பவுடரை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவோடு இருக்கும்.

beauty,joy,pacebag,sandalwood ,அழகு, சந்தனம், பேஸ்பேக், மகிழ்ச்சி, பிரகாசம், மாஸ்க்

கற்றாழை ஜெல்லில் 1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் முகத்தில் தடவி உலர வைத்துக் கழுவ வேண்டும். இதனால் வெயிலால் பாதிக்கப்பட்ட சருமம் குணமாகும். சந்தனப் பவுடர் மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாக கலந்து, அதை பால் அல்லது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி காய வைத்து கழுவ, முகம் பிரகாசமாக இருக்கும்.

பருக்கள் அதிகம் உள்ளவர்கள், சந்தனப் பொடி மற்றும் வேப்பிலைப் பொடியை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவினால், அதில் உள்ள பாக்டீரியல் தன்மை, பருக்களைப் போக்கி, முகத்தைப் பொலிவாக்கும். சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், முகம் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

Tags :
|
|