Advertisement

தலை முடியில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும் பயனுள்ள குறிப்புகள்!!

By: Monisha Wed, 10 June 2020 4:44:27 PM

தலை முடியில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும் பயனுள்ள குறிப்புகள்!!

அழகில் முக்கிய இடம் பெற்றது தலை முடி ஆனால் முடி உதிர்தல், சொட்டை, புழுவெட்டு போன்ற பல பிரச்சனைகள் தலை முடியில் ஏற்படுகிறது. அவற்றை சரிசெய்ய இதோ உங்களுக்கு சில குறிப்புகள்!

முடி வளர கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும். அடுத்தாக காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

வழுக்கையில் முடி வளர கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும். இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

head hair,troubles,curry leaves,carrots,lemon juice ,தலை முடி,பிரச்சனைகள்,கறிவேப்பிலை,காரட்,எலுமிச்சம் பழச்சாறு

முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும். காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வந்தாலும் முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

head hair,troubles,curry leaves,carrots,lemon juice ,தலை முடி,பிரச்சனைகள்,கறிவேப்பிலை,காரட்,எலுமிச்சம் பழச்சாறு

நரை முடியை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால் நரை மாறிவிடும். முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும். சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

Tags :