Advertisement

சரும அழகிற்கு பல நன்மைகளை அள்ளித்தரும் வால்நட் எண்ணெய்!

By: Monisha Wed, 01 July 2020 1:12:22 PM

சரும அழகிற்கு பல நன்மைகளை அள்ளித்தரும் வால்நட் எண்ணெய்!

வால்நட் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் வளமையாக உள்ள ஒரு பொருள். காலம் காலமாக அதனை நட்ஸ் வகையாக மக்கள் உட்கொண்டு வருகின்றனர். ஆனால் வால்நட்டில் இருந்து பெறப்படும் எண்ணெய் உங்கள் சருமம், தலைமுடி மற்றும் உடல்நலத்திற்கு பல பயன்களை அளித்து வருகிறது. குறிப்பாக சரும பிரச்சனைகள் மற்றும் கூந்தல் பிரச்சனைகளை சரிசெய்ய மிகவும் உதவியாக உள்ளது. ஆகவே இப்போது வால்நட் எண்ணெயால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்க்கப் போகிறோம்.

தினமும் இரவில் வால்நட் எண்ணெயை சருமத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் ஏற்படும் வறட்சியானது நீங்கி, சருமம் பொலிவோடு அழகாக இருக்கும். சரும சுருக்கத்தை எதிர்க்கும் வால்நட் எண்ணெய், தோலின் சுருக்கத்தை நீக்குகிறது. இது எண்ணெய் பசையுடன் காணப்படுகிறது. இதை தொடர்ந்து தடவி வந்தால், குறித்த காலத்துக்குள் தோல் சுருக்கம் மறைந்து விடும்.

walnut oil,skin beauty,dryness,fungus,dark circle ,வால்நட் எண்ணெய்,சரும அழகு,வறட்சி,பூஞ்சை,கருவளையம்

நாம் அனைவருமே பூஞ்சைகளின் தாக்கத்தை அனுபவித்திருப்போம். அது நம்மை நிலை குலையச் செய்யும். இது போன்ற தொற்றுகளுக்கு வால்நட் எண்ணெய் சிறந்த தீர்வாக இருக்கும். பூஞ்சைகளின் தொற்றுக்கு வால்நட் எண்ணெய் மிகவும் நல்லது. தோல் தடிப்பு மற்றும் சொரியாசிஸ் என்ற இந்த அலர்ஜி நோயால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டு திகிலடைந்திருப்போம். ஆனால் இதை வால்நட் எண்ணெய் மிக அழகாக குணப்படுத்தும். அதற்கு இதை சாதாரணமாக குளிக்கும் போது குளிக்கும் நீரில் சேர்த்து பயன்படுத்தலாம்.

தற்போது அனைவரும் சந்திக்கும் அழகு பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். வால்நட் எண்ணெயைக் கொண்டு கண்களை மசாஜ் செய்து வர உடனே கருவளையம் நீங்கும். இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட். இது முதுமையை எதிர்த்து போரிடுகிறது. மேலும் இது சருமத்திற்கும் மிகவும் நல்லது.

walnut oil,skin beauty,dryness,fungus,dark circle ,வால்நட் எண்ணெய்,சரும அழகு,வறட்சி,பூஞ்சை,கருவளையம்

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி, தலை வாரும் போது, அதிக எண்ணிக்கையிலான முடி கொட்டுதலை விரும்ப மாட்டார்கள். முடி கொட்டுதல் ஒரு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆனால் வால் நட் எண்ணெய், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலத்தின் உதவியால், முடி கொட்டுதலை நிறுத்துகிறது. இந்த கொழுப்பு அமிலம், செல்களின் பாதிப்பைத் தடுக்கிறது.

வால்நட் எண்ணெய் பொடுகை அழிப்பதிலும், சிறந்து விளங்குகிறது. இது தலை சருமத்தை சுத்தப்படுத்தி, அதில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. இதை வழக்கமாக தினமும் உபயோகித்தால் நல்ல தீர்வை பெற முடியும். இது தலை சருமத்திலுள்ள தோலடுக்குகளை சுத்தப்படுத்தி, பொடுகை வர விடாமல் தடுக்கிறது. வால்நட் எண்ணெயில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் அது தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்தும்.

Tags :
|