Advertisement

கருமையற்ற கழுத்தை பெற ஆசையா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

By: Monisha Wed, 18 Nov 2020 12:41:10 PM

கருமையற்ற கழுத்தை பெற ஆசையா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

பெரும்பாலான பெண்கள் தங்கள் முகம், கால் கை என பார்த்து பார்த்து அழகுப்படுத்திக் கொள்ளுகின்றனர். கழுத்துப்பகுதியை கவனிப்பதே இல்லை. கழுத்து பகுதியை கவனிக்காமல் இருந்தால் கழுத்து கருமையடைந்து மிகவும் கேவலமாக இருக்கும். சிலர் அதிகமாக கவனித்தாலும் சில பிரச்சனைகளால் கழுத்து கருமை அடைகிறது. இந்த பதிவில் கருமை அடைந்திருக்கும் உங்கள் கழுத்து பகுதியை எப்படி சரி செய்வது என்று பார்கலாம்.

தயிர்
தொற்றினை நீக்குவதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இயற்கையாக கிடைக்கக்கூடியது. கருமையையும் சருமத்தில் படியும் அழுக்குகளையும் சீக்கிரம் அகற்றிவிடும்.

ஓட்ஸ்
ஓட்ஸ் உடலுக்கு மிகுந்த சக்தியளிக்கும் ஒரு உணவாக இருக்கிறது. இதில் கார்போஹைட்ரேட் சத்துகள் அதிகம் நிறைந்திருக்கின்றன. ஓட்ஸ் கழுத்திலுள்ள இறந்த செல்களை முற்றிலுமாக மாற்றுகிறது. இது கருமையை போக்கி நிறத்தினை அதிகரிக்கிறது.

dark,neck,yogurt,oats,lemon ,கருமை,கழுத்து,தயிர்,ஓட்ஸ்,எலுமிச்சை

எலுமிச்சை
எலுமிச்சை ஒரு இயற்கையான பொருள் ஆகும். இது கருமை நிறத்தை போக்கி அழுக்கு, எண்ணெய் பசையை முற்றிலும் நீக்குகிறது.

பயன்படுத்தும் முறை
ஓட்ஸ், எலுமிச்சை, தயிர் ஆகிய மூன்று பொருள்களையும் கலந்து, கழுத்தில் போட்டு சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். 30 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரினில் கழுவவும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால், கருமையற்ற கழுத்தை பெறலாம்.

Tags :
|
|
|
|