Advertisement

அடர்த்தியாக முடி வளரணுமா... இதோ சில டிப்ஸ் உங்களுக்காக!!!

By: Nagaraj Wed, 23 Aug 2023 11:58:37 PM

அடர்த்தியாக முடி வளரணுமா... இதோ சில டிப்ஸ் உங்களுக்காக!!!


சென்னை: அடர்த்தியாக முடியை வளர்க்க யாருக்கு தான் ஆசை இருக்காது. ஆனால் ஒரு கைப்பிடி அளவு முடியை வளர்ப்பது என்பதே மிகவும் சிரமம். இயற்கையாக முடி வளர்ச்சி அதிகமாக இருப்பவர்களுக்கு, முடி உதிர்ந்தாலும், சீக்கிரம் உதிர்ந்த இடத்தில் முடி வளர்ந்து விடும்.

ஆனால் பிறந்ததிலிருந்தே முடி வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கிறது, என்பவர்களுக்கு முடியை வளர செய்வதில் ஒரு சில சிரமங்கள் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு, கூடவே இந்த ஹேர் பேக் முயற்சி செய்யும்போது நிச்சயமாக நல்ல முடி வளர்ச்சியை காணலாம்.

பிறந்ததிலிருந்து உங்களுக்கு முடி மெலிசாக தான் இருக்கிறது என்றாலும், ஒரு சில நாட்களில் அதை அடர்த்தியாக மாற்றலாம். நீங்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்.

biotin,dietary supplements,hair pack,thick hair, ,அடர்த்தியான முடி, உணவுப் பொருட்கள், பயோட்டின், ஹேர் பேக்

கூடவே இந்த ஹேர் பேக்கையும் முயற்சி செய்து பாருங்கள். ஒரு சிறிய துண்டு கற்றாழையை செடியில் இருந்து வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மஞ்சள் நிறத்தில் வெளிவரக்கூடிய பாலை மட்டும் சுத்தமாக கழுவி விடுங்கள்.

கற்றாழையில் இரண்டு பக்கம் இருக்கக்கூடிய முல்லை நீக்கிவிடுங்கள். மேலே பச்சை நிற தோளோடு அந்த கற்றாழைகளை துண்டு துண்டாக நறுக்கி ஒரு முறை தண்ணீரில் கழுவி, மிக்ஸி ஜாரில் போட்டுக்கொள்ள வேண்டும். இதோடு இரண்டு கைப்பிடி கருவாப்பிலை சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து விடுங்கள். இதை அப்படியே ஹேர் பேக்காக போடலாம்.

உங்களுக்கு தலையில் திப்பி திப்பியாக ஒட்டி பிடிக்கும் என்றால் இந்த சாறை மட்டும் வடிகட்டியும் ஹேர் பேக்காக பயன்படுத்தலாம். அரைத்த இந்த ஹேர் பேக் கோடு ஒரே 1 விட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஜெல்லை மட்டும் சேர்த்து, நன்றாக கலந்து தலையில் ஹர்பாக் போட வேண்டும் ஸ்கேல்பில் படும்படி இந்த ஹேர் பேக் போட்டுவிட்டு, முடியின் நுனி வரை இந்த ஹேர் பேக் போட்டுவிட்டு, 20 நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்புவை வைத்து அலசி விட வேண்டும்.

Tags :
|