Advertisement

உங்கள் முக அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா?

By: Monisha Fri, 13 Nov 2020 11:59:13 AM

உங்கள் முக அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா?

உங்கள் முக அழகை தக்க வைத்துக்கொள்ள இரவு படுக்கைக்குச் செல்லும்முன் ஒரு பத்து, இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதும்.

உங்கள் உதடுகளில் உள்ள வெடிப்புகள் நீங்க தினமும் சிறிதளவு 'வேசலின்' எடுத்து உங்கள் உதடுகளில் தடவி வந்தால், மென்மையாகவும், வெடிப்புகள் இல்லாமலும் இருக்கும்.

முகத்திற்கு பொலிவும், வசீகரமும் சேர்ப்பவை கண்கள். சிலருக்கு கண்களின் புருவத்தில் தேவையான அளவிற்கு முடி இருக்காது. இதற்கு சுத்தமான விளக்கெண்ணெயை கொஞ்சமாக எடுத்து புருவ முடிகளிலும், கண்முடிகளிலும் தேய்த்து வந்தால், முடி நல்ல அடர்த்தியாகவும், அழகாகவும் வளரும்.

face,beauty,lips,eyes,skin ,முகம்,அழகு,உதடு,கண்கள்,சருமம்

சோர்வான கண்கள் உடையவர்கள் ரோஸ் வாட்டரில் நனைத்த காட்டன் பேட், வட்டமாக வெட்டிய வெள்ளரித் துண்டு போன்றவற்றை கண்களின் மேல் வைத்துக் கொண்டாலே போதும் கண்கள் பொலிவுடன் காணப்படும்.

நன்றாகப் பொடியாக நறுக்கிய வெள்ளரித் துண்டுகளையோ அல்லது அதனுடன் கேரட் ஜூஸைக் கலந்தோ கண்களுக்கு அடியில் தடவி வந்தால், கரு வளையங்கள் மறையும்.

இரவு உறங்கச் செல்லும்முன் முகத்தில் படிந்துள்ள அழுக்கை அகற்றுவது முக்கியமான வேலையாக இருக்க வேண்டும். எண்ணெய் பசையுள்ள சருமத்தை 'வால்நட் ஸ்க்ரப்' கொண்டும், உலர்ந்த மற்றும் சென்ஸிடிவ் சருமத்தை மிருதுவான 'பேபி ஆயில்' கொண்டும் துடைத்து கொள்ளலாம். அவ்வாறு துடைக்கும்போது வட்ட வாக்கில் துடைக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட வேண்டும்.

Tags :
|
|
|
|