Advertisement

கூந்தல் மென்மையாக வேண்டுமா? அரிசி கழுவிய நீரை இப்படி பயன்படுத்துங்கள்!

By: Monisha Wed, 18 Nov 2020 12:13:18 PM

கூந்தல் மென்மையாக வேண்டுமா? அரிசி கழுவிய நீரை இப்படி பயன்படுத்துங்கள்!

அரிசி கழுவிய நீரானது அழகு பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் சருமம், கூந்தல் போன்றவற்றைப் பராமரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை துரிதமாகச் செயல்பட்டு நமக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது. மேலும் ஆய்வுகளிலும் அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அரிசி கழுவிய நீரைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்கும். அத்துடன், சருமத்துளைகளும் அடைக்கப்படும். இதற்கு பஞ்சினை அரிசி கழுவிய நீரில் நனைத்து, பின் அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.

hair,skin,tenderness,rice wash water,beauty ,கூந்தல்,சருமம்,மென்மை,அரிசி கழுவிய நீர்,அழகு

அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியாக சரும செல்களுக்குள் செல்வதால், சருமம் எப்போதும் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும். எனவே தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டியது அவசியம்.

சிலருக்கு கூந்தல் எப்போதுமே வறட்சியுடன் காணப்படும். அவர்கள் அவ்வப்போது கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊறவைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும்.

Tags :
|
|