Advertisement

வயது போனாலும் இளவயது லுக் அப்படியே இருக்க வேண்டுமா?

By: Monisha Mon, 08 June 2020 3:19:49 PM

வயது போனாலும் இளவயது லுக் அப்படியே இருக்க வேண்டுமா?

அனைவருக்கும் வயது போனாலும் பார்க்க இளவயது போன்று இருக்கத்தான் ஆசை. சருமத்தளர்ச்சி ஏற்படாமல் இருக்கவும், முகத்தை இறுக்கமாக வைக்கவும் ஃபேஸ் பேக் உதவுகிறது.

தேவையான பொருட்கள்
களிமண் - 2 டீஸ்பூன்
பன்னீர்- தேவைக்கு
நறுமண எண்ணெய்- 3 சொட்டு

களிமண், எண்ணெய், தண்ணீர் மூன்றையும் கிண்ணத்தில் நன்றாக கலக்கவேண்டும். இவை பேஸ்ட் பதத்துக்கு வரும் வரை குழைத்து முகம், மற்றும் கழுத்து பகுதியில் தடவ வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

dermatitis,face pack,clay,paneer,lactic acid ,சருமத்தளர்ச்சி,ஃபேஸ் பேக்,களிமண்,பன்னீர்,லாக்டிக் அமிலம்

முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குகிறது. திசுக்களை குறையில்லமால் சரிசெய்வதன் மூலம் முகம் புத்துணர்ச்சி பெறுகிறது. முகத்தில் நெற்றியில் விழும் சுருக்கங்களை குறைத்து சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவுகிறது.

பேஸ் பேக் பயன்படுத்துவதற்கு முன்பு முகத்தை காய்ச்சாத பால் வைத்து சுத்தம் செய்ய வேண்டும். பாலில் இருக்கும் லாக்டிக் அமிலமானது சருமத்தில் இருக்கும் அழுக்கை சுத்தப்படுத்தும். அதனால்தான் முகத்துக்கு க்ளென்சிங் செய்ய பால் சிறந்தது என்று சொல்வார்கள்.

ஃபேஸ் பேக் போடும் போது முகத்துக்கு ஃபேஸ் காஸ் என்று சொல்லக்கூடிய மெல்லிய துணியை முகத்தின் மேல் போட்டு அதன் மேல் போடலாம். இதனால் கண்களை சுற்றி நன்றாகவே அப்ளை செய்யமுடியும். உங்கள் வயதை குறைத்து காண்பிக்கும் இந்த ஃபேஸ் பேக் ஒய்வாக இருக்கும் போதெல்லாம் பயன்படுத்தினாலே போதுமானது.

Tags :
|
|