Advertisement

இளமையை தக்க வைக்க உதவும் தர்பூசணி பழம்

By: Nagaraj Fri, 22 July 2022 4:06:01 PM

இளமையை தக்க வைக்க உதவும் தர்பூசணி பழம்

சென்னை: தர்பூசணியில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்திருக்கிறது. இது ஆரோக்கியத்திற்குரியது.

அதே நேரத்தில் அழகை தந்து இளமையை தக்க வைக்கவும் தர்பூசணி உதவுகிறது. சருமத்தி்ன் வறட்சியை போக்கி, ஜொலிப்பை தருகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு துண்டு தர்பூசணி பழத்தை வாங்கி அதன் தசைப்பகுதியை எடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாக பூசுங்கள். பதினைந்து நிமிடங்கள் கழித்து இளஞ் சுடுநீரில் கழுவுங்கள்.

watermelon,face mask,rice flour,curd,blackheads ,தர்ப்பூசணி, முகப்பொலிவு, அரிசி மாவு, தயிர், கரும்புள்ளிகள்

அதன் பின்பு குளிர்ந்த நீராலும் ஒருமுறை கழுவுங்கள். இது சருமத்தின் பொலிவுக்கு வழிவகுக்கும். தர்பூசணி பழக்கூழை இரண்டு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து, அதில் தயிர் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் நீங்கும்.

தயிருக்கு பதில் பாலும் சேர்த்துக் கொள்ளலாம். இத்துடன் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்துக் கொண்டால் அது சிறந்த ஸ்கிரப் ஆக பயன்படும்.

Tags :
|