Advertisement

வறண்டு போன சருமங்களை, ஈரப்பதமாக வைத்துக்கொள்ள என்ன செய்யலாம்?

By: Nagaraj Mon, 26 June 2023 11:49:38 PM

வறண்டு போன சருமங்களை, ஈரப்பதமாக வைத்துக்கொள்ள என்ன செய்யலாம்?

சென்னை: நம்முடைய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக பால் இருந்து வருகிறது. பால் பல்வேறு மருத்து குணங்களை கொண்டது. இவ்வளவு அற்புதங்களை கொண்ட, இந்த பாலை சருமத்திற்கு எவ்வாறு பயன்படுத்தி அழகான சருமத்தை எவ்வாறு பெறலாம் என தெரிந்து கொள்வோம்.

பாலாடை வறண்டு போன சருமங்களை, ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. பொதுவாகவே பனிக்காலங்களில் சிலருக்கு சருமம் வறண்டு காணப்படலாம். அப்படி உள்ளாவர்கள் பாலாடை பேஸ் மாஸ்க் செய்து முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ளலாம். இந்த பாலாடை பேஸ் மாஸ்கை வாரம் ஒருமுறையோ, அல்லது இரண்டு முறையோ பயன்படுத்தலாம். இதனால் முகத்தை ஏற்படும் பருக்களை கட்டுப்படுத்தலாம்.

செய்முறை: பாலில் உள்ள ஆடையை சேகரித்து, அதை முகத்தில் தடவி, மாசாஜ் செய்து கொள்ளுங்கள். பின் 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவலாம். இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவும். இதனுடன் மஞ்சள் சேர்த்து தடவி வந்தால் முகம் சும்மா பளபளவென இருக்கும்.

coconut oil,cottage cheese,dead cells,massage,skin,turmeric , இறந்த செல்கள், சருமம், தேங்காய் எண்ணெய், பாலாடை, மசாஜ், மஞ்சள்

மஞ்சள் பேஸ் மாஸ்க்: சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு தேக்கரண்டி வெள்ளை சக்கரை, 1/2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது ஸ்க்ரப்பர் தயாராகிவிட்டது.

இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யுங்கள் பின் 5 நிமிடம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள சர்க்கரை சருமத்தில் உள்ள இறந்த செல்களுக்கு புத்துயிர் அளிப்பதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும்.

Tags :
|