Advertisement

முகப்பரு ஏற்படுவதற்கு என்ன காரணம்? எவ்வாறு சரி செய்யலாம்?

By: Monisha Tue, 14 July 2020 12:38:23 PM

முகப்பரு ஏற்படுவதற்கு என்ன காரணம்? எவ்வாறு சரி செய்யலாம்?

இந்தியாவில் வெவ்வேறு காலநிலைகள் மற்றும் எண்ணற்ற சீசன்கள் இருக்கின்றன. இந்தியாவின் முழு பரப்பளவிலும், அனைத்து வகையான காலநிலைகள் இருக்கிறது. தீவிரமான வானிலை மற்றும் காசு மாசுபாடு, சருமத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. உலக சுகாதார அமைப்பின் படி, தோல் தொடர்பான நோய்தான் இந்தியாவில் பொதுவான தொற்று அல்லாத நோயாக இருக்கிறது.

இதில் இந்திய பெண்கள் மற்றும் ஆண்களை அதிகமாக பாதிக்கும் தோல் வியாதிகளில் ஒன்று முகப்பரு. இந்த முகப்பரு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. சருமத்தில் உள்ள எண்ணெய்ப்பசை, சுற்றுச்சூழலில் உள்ள மாசுப்பொருட்களை ஈர்த்து, துளைகளை மறையச்செய்கிறது. இதுவே, முகப்பரு போன்றவற்றிற்கு காரணியாக அமைகிறது.

climate,acne,women,men,skin disease ,காலநிலைகள்,முகப்பரு,பெண்கள்,ஆண்கள்,தோல் வியாதி

ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள், மன அழுத்தம், புகைப்பிடித்தல் போன்றவற்றால் கூட முகப்பருக்கள் ஏற்படும். தலையணை உறையை அடிக்கடி மாற்றாமல், அழுக்குப்படிந்த கைகளை சருமத்தில் வைப்பதால் கூட முகப்பருக்கள் ஏற்படும். சரியாயில்லாத உணவுமுறை, மற்றும் நொறுக்குத்தீனிகள் அதிக அளவு எடுத்துக்கொள்வது முகப்பரு ஏற்படுவதற்கான காரணமாக இருக்கிறது.

அதிக அளவு முகப்பரு இருந்தால், சரியான தோல் சிகிச்சை வல்லுநரிடம் சென்று ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது. முகப்பருக்களை அகற்ற, உங்களுக்கு ஏற்ற சரும பாதுகாப்பு முறையை தினமும் பின்பற்றுவது நல்லது.

வேம்பு, துளசி, கற்றாழை போன்ற பொருட்களாலான ஹமாம் சோப்பை பயன்படுத்தி, தினமும் உங்கள் சருமத்தை தூய்மைப்படுத்துதல், முகப்பருக்களில் இருந்து உங்களை காத்துக்கொள்ள உதவும். எண்ணெய் தன்மை அற்ற மாய்ஸ்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது மிகவும் அத்தியாவசியமானது.

Tags :
|
|
|