- வீடு›
- அழகு குறிப்புகள்›
- இளம் வயதில் தலைமுடி வெள்ளையாக மாறுவதற்கு காரணம் என்ன?
இளம் வயதில் தலைமுடி வெள்ளையாக மாறுவதற்கு காரணம் என்ன?
By: Monisha Fri, 20 Nov 2020 3:34:40 PM
இன்றைய நவீன காலத்தில் நரை முடி இளைஞர்களை கூட விட்டு வைக்கிறதில்லை. பலருக்கும் தலைமுடி வெள்ளையாக இருப்பதற்கு மன அழுத்தம், வேலை அழுத்தம் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. அது எப்படி? முடியின் வேர்களில் நிறமி செல்கள் இருக்கும். இதில் மெலனின் என்ற சுரப்பிதான் முடிக்கு நிறத்தை கொடுக்கிறது.
வயது கடக்க கடக்க நிறமி செல்கள் செயலிழக்க ஆரம்பித்து முடியின் நிறமும் மங்கி வெள்ளையாகிவிடும். இது வயது முதிர்வின் போதுதான் நிகழும். ஆனால் இளமையிலேயே இப்படி நிகழ பல காரணங்கள் இருக்கின்றன.
சிலர் மன அழுத்தத்தால் புகைப்பிடிகின்றனர். இந்த பழக்கமும் கருகருவென இருக்கும் முடியை வெள்ளையாக்குகிறது. முடி வெள்ளையாக மாறுவதற்கு முக்கிய காரணம் வைட்டமின் B-6,B-12, பயோடின் மற்றும் வைட்டமின் D ஆகிய ஊட்டச்சத்துக் குறைப்பாடுகள் தான். அதுமட்டுமல்லாமல் மரபணுவும் காரணமாக இருக்கலாம்.
நமது உடலில் ஆண்டி ஆக்ஸிடண்ட் சமமாக இல்லாமல் இருக்கும் போது ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் அதிகரிக்கும். இதனால் உடல் செல்கள் சிதைக்கப்படும். இந்த செல்களின் சிதைவு தலைமுடி வேர்களிலும் நிகழும். இதனால் மெலனின் முற்றிலுமாக தடைபட்டு தலைமுடி வெள்ளையாக மாறும்.
இதை தவிர தலை முடி பிரச்னைக்காக பயன்படுத்தப்படும் கெமிக்கல் பொருட்களும் முடி கொட்டுவதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளன. இதுபோன்று தலைமுடிக்காக தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களில் ஹேர் டை, ஜெல் ஹேர் ஸ்ப்ரே, ஏன் ஷாம்பூ கூட காரணமாகலாம் .
இதில் பயன்படுத்தப்படும் ஹைட்ரஜன் பெர்ராக்ஸைட் தலைமுடி வேர்களை சேதப்படுத்தி, அதனால் மெலனின் சுரப்பையும் தடை செய்கிறது. குறிப்பாக இந்த கெமிக்கல் ஹேர் டைகளில்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இவற்றை தவிர்க்க வேண்டுமானால் தலை முடி பிரச்னைகளுக்கு கெமிக்கல் பொருட்களை தவிர்த்து இயற்கையாக கிடைக்கும் பொருட்களை உபயோகப்படுத்த முயற்சி செய்யுங்கள். மேலும் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த உணவை சாப்பிடுங்கள். வைட்டமின் குறைபாடுகள் வராமல் இருக்க தடுங்கள். குறிப்பாக புகைப்பழக்கத்தை விட்டு விலகுங்கள். இவற்றை சரியாக செய்தாலே வெள்ளை முடி வராமல் தடுக்கலாம்.