Advertisement

வயதாகும் போது சருமத்தில் என்னென்ன மாற்றம் ஏற்படுகிறது?

By: Monisha Wed, 02 Sept 2020 11:42:34 AM

வயதாகும் போது சருமத்தில் என்னென்ன மாற்றம் ஏற்படுகிறது?

நீங்கள் வயதாகும் போது, உங்கள் சருமமும் வயதாகிறது. என்னென்ன மாற்றம் ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

20களில்...உங்கள் சருமம் அதிகபட்ச பொலிவுடன் காணப்படும், பதின்பருவ பருக்களின் பாதிப்பு தொடரும். குழந்தை பிறப்புக் கட்டுப்பாடு அல்லது கருத்தரித்தல் சருமத்தைப் பாதிக்கலாம்.

30களில்...மரபுரீதியாக நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், பெரிதாக மாற்றம் இருக்காது, ஆனாலும் கண்ணின் கீழ் பைகள், வாயை சுற்றிலும் சிரிக்கும் கோடுகள் போன்றவை ஏற்படக்கூடும்.

40களில்...வயதாவதன் தெளிவான அறிகுறிகளை சருமம் காண்பிக்க தொடங்கும். நெற்றி சுருக்கங்கள், உள்ளங்கையின் பின்புறம் சுருக்கம், கழுத்து மற்றும் புறங்கைகளில் சுருக்கம், தொங்கும் சருமம் போன்றவை ஏற்படக்கூடும். இந்த சுருக்கங்களை சரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

skin,beauty,carrots,honey,wrinkles ,சருமம்,அழகு,கேரட், தேன்,சுருக்கங்கள்

கேரட் சாறு, தேன்
ஒரு டேபிள் ஸ்பூன் கேரட் சாறுடன் ஒரு டீஸ்பூன் பால் சேர்த்து முகத்திலும் கழுத்திலும் தேய்க்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் கேரட் சாறு அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து கழுத்திலும் முகத்திலும் தேய்க்கவும். 20 நிமிடத்திற்குப்பிறகு ஒரு பிஞ்ச் சோடா பை கார்பனேட் கலந்த சுடுநீரில் பஞ்சை முக்கி துடைத்தால் எப்படிப்பட்ட சுருக்கங்களும் மாயமாகி விடும்.

பப்பாளி, பாதம் எண்ணெய்
பப்பாளிப்பழம் முகச்சுருக்கத்தைப் போக்கும் பழுத்த பப்பாளியை நன்கு கூழாக்கி அதனை முகத்தில் தேய்ப்பது நல்ல பலன் தரும். பப்பாளி சதையை சாப்பிட்ட பின் அதன் தோலின் உட்பகுதியில் உள்ள பகுதியை தேய்த்தால் போதும் நல்ல பலன் கிடைக்கும். இரவு படுக்கைக்குப் போகும் முன்பு பாதம் எண்ணெயை நன்றாக முகத்தில் தேய்த்து உறங்கவும். பின்னர் காலையில் எழுந்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவ சுருக்கம் போய்விடும்.

Tags :
|
|
|