Advertisement

நளினமான கால்களை பெற என்ன செய்யணும்... இதோ யோசனை!!!

By: Nagaraj Sun, 02 Apr 2023 3:47:39 PM

நளினமான கால்களை பெற என்ன செய்யணும்... இதோ யோசனை!!!

சென்னை: ஜீன்ஸ், சுரிதார், ஸ்கர்ட் என எவ்வித மாடர்ன் டிரஸ் அணிந்தாலும், கால்களின் ஷேப் அழகாக இருந்தால், நளினமானத் தோற்றம் பளிச்சிடும். அதற்கு டீன்ஏஜ் பெண்கள், வீட்டில் 'Toe walk' செய்ய வேண்டும். அதாவது வழுக்காத தரை மீது கால் விரல்களை மட்டுமே ஊன்றி, கெண்டைக்கால் சதையை இலேசாக ‘ஸ்ட்ரெச்’ செய்தபடி நடந்தால், ஸ்லிம்மான கால்கள் அமையும்.

சில பெண்களுக்கு கணுக்கால் மூட்டுகள் கறுப்பாகத் தடித்துப் போய் காணப்படும். கருமை போக வேண்டும் என்பதற்காக ஸ்க்ரப்பர் போட்டுத் தேய்ப்பார்கள். அது கண்டிப்பாகக் கூடாது. அப்படித் தேய்த்தால், கருமை நிறம் அதிகமாகிவிடும். ஒரு லிட்டர் இளம் சூடான வெந்நீரில், ஒரு மூடி எலுமிச்சை சாறு, இரண்டு டேபிள் ஸ்பூன் வேப்பிலை சாறு போட்டு மிருதுவான துணியை நனைத்து, அடிக்கடி ஒத்தடம் தந்தால் நிறம் மாறிவிடும்.

legs,wasambu,garbagemani,fenugreek,protection,papaya fruit ,கால்கள், வசம்பு, குப்பைமேனி, கோரைக்கிழங்கு, பாதுகாப்பு, பப்பாளி பழம்

சில பெண்களுக்கு முழங்கால் மட்டும் கறுப்பாக, இருப்பதுடன், சொர சொரப்பாகவும் இருக்கும். பப்பாளிப் பழத்தை, தோலோடும் விதைகளோடும் அப்படியே விழுதாக அரைத்து, கால் முழுக்கப் பூசி வந்தால், தங்க நிற கால்களை உடனடியாகப் பெற்று மகிழலாம்.

வசம்பு, குப்பைமேனி கீரை, கோரைக்கிழங்கு போன்றவை தலா ஐம்பது கிராமும், கஸ்தூரி மஞ்சள் இருபது கிராம் எடுத்துக்கொண்டு நிழலில் உலர்த்தி, தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். தினமும் குளிக்கப் போகும்போது, கால்களில் பூசி, சிறிது நேரம் கழித்து, மேற்புறமாகத் தேய்த்து வழித்துக் குளிக்க, ரோமமில்லாத மினு மினு கால்கள் உங்களை கர்வம் கொள்ள வைக்கும்!

Tags :
|