Advertisement

புருவத்தில் உள்ள முடி அடர்த்தியாக வளர என்ன செய்வது?

By: Monisha Tue, 13 Oct 2020 5:03:52 PM

புருவத்தில் உள்ள முடி அடர்த்தியாக வளர என்ன செய்வது?

பெண்கள் தங்களது புருவத்தை அழகு படுத்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர். அந்த வகையில் புருவத்தில் உள்ள முடி அடர்த்தியாக வளர என்ன செய்வது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஐப்ரோ ப்ரஷ் பயன்படுத்தி புருவத்தை அடிக்கடி புருவத்தை சரி செய்ய வேண்டும். மேலும் முகத்தை கழுவும்போது புருவப் பகுதி யில் உள்ள வியர்வைகள், அழுக்குகளை சுத்தமாக கழுவுவதும் அவசியம் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இயற்கையாகவே புருவத்தை அடர்த்தியாக காட்ட தி சுகர் அர்ச் அறைவல் புரோ டிபைனர் (Sugar Arch Arrival Brow definer ) பயன்படுத்தலாம். மேலும் புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர மைக்ரோ நியூட்ரியண்ட்ஸ் என்னும் நுண்சத்துக்கள் நிறைந்த உணவினை அதிகம் சாப்பிடலாம்.

women,beauty,eyebrows,threading,cactus ,பெண்கள்,அழகு,புருவம்,திரெடிங்,கற்றாழை

புருவத்தை திரெடிங் செய்வதற்க்கு முன்பு மிதமான வெந்நீரில் குளித்துவிட்டு திரெடிங் செய்தால், அதிக வலி தராமல் இருக்கும். மேலும் த்ரெட்டிங் முடிந்ததும் கற்றாழை ஜெல் கொண்டு புருவப் பகுதியின் மீது மசாஜ் செய்து வருவது சிறந்தது.

புருவத்தில் முடி அடர்த்தியாகவும், மிருதுவாகவும் இருப்பதற்கு தினமும் இரவு தூங்க செல்லும் முன் விளக்கெண்ணெய் ஒரு துளி எடுத்து இரண்டு நிமிடம் மசாஜ் செய்து படுத்ததாலே முடி அடர்த்தியாக மிருதுவாக வேகமாக வளரும்.

Tags :
|
|