Advertisement

வெள்ளை முடி இயற்கையாக கருமை ஆக என்ன செய்யலாம்!!!

By: Nagaraj Sun, 06 Nov 2022 8:44:14 PM

வெள்ளை முடி இயற்கையாக கருமை ஆக என்ன செய்யலாம்!!!

சென்னை: எவ்வளவு அழகாக இருந்தாலும் முடி வெள்ளையாக மாறி விட்டால் சின்ன வயசு உள்ளவர்கள் கூட வயதான பெரியவர்கள் போல் தோற்றம் அளிக்க தொடக்கி விடுவார்கள்.

வெள்ளை முடி வருவதற்கான காரணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

வயிற்றில் அதிகளவு பித்தம் இருத்தல். மனதில் அதிகளவு கவலைகள் இருத்தல். அதிகளவு இரசாயனங்கள் முடிக்கு பயன்படுத்துதல். முடியில் மாசுக்கள் அதிகளவு படிதல். ஹார்மோன் குறைபாடுகள் போன்றவை ஆகும். சரி இயற்கையாக முடி கருமையாக மாற சில வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம். நெல்லிக்காய் பவுடரில் எலுமிச்சை சாற்றினை கலந்து தலையில் சிறிது நேரம் ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி சிறிது காலம் செய்து வந்தால் சிறந்த பலனை அடையாளம்.

எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் அதிகளவு சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். இது முடிக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கும். வெங்காயம் தலைமுடி உதிர்வை தடுப்பதுடன் முடிக்கு தேவையான போஷாக்கினை வழங்கி முடியை கருமையாக்க உதவும்.

white hair,best fruit,curry leaves,oil,onion ,
வெள்ளை முடி, சிறந்த பலன், கறிவேப்பிலை, எண்ணெய், வெங்காயம்

வெங்காய சாற்றினை தலையில் உற வைத்து பின்பு ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும். இது தலையில் உள்ள கிருமிகளை அழிப்பதுடன் போஷாக்கினையும் வழங்குகின்றது. இதனை தினமும் செய்தால் தான் சிறந்த பலனை பெற முடியும். உணவிலும் அதிகளவு வெங்காயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இளநரை மற்றும் முடியை கருமையாக்க சிறந்த இயற்கை பொருள் கறிவேப்பிலை ஆகும். கறிவேப்பிலையை உலர வைத்து பொடியாக்கி தலையில் ஊற வைத்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்தால் இளநரை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

தலைக்கு வைக்கும் எண்ணையில் கறிவேப்பிலை இலை அல்லது விதையை ஊறவைத்து தினமும் தலைக்கு வைத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உணவில் அதிகளவு கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். கறிவேப்பிலையை உணவில் இருந்து விலக்காமல் சேர்த்து சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். இது சிறந்த பலனை கொடுக்கும்.

Tags :
|