Advertisement

எந்த ஹேர் ஸ்டைல் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்!!!

By: Nagaraj Thu, 15 Dec 2022 11:24:31 PM

எந்த ஹேர் ஸ்டைல் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்!!!

சென்னை: உங்கள் தலைமுடி, கழுத்தின் பின்பகுதி வரை நீளமாக இருக்கிறதா? உங்கள் தலைமுடியை முழுமையாக பின்னோக்கி வாரி விடுங்கள். முன்புறம், ஒரு பிரிவை எடுத்து, இன்னும் கொஞ்சம் பின்புறமிருந்து முன்னோக்கி வாரி விட்டு, பின் செய்து கொள்ளுங்கள். சிறிய கொண்டை. கழுத்துப் பகுதியில், ஒரு கர்லிங் அயர்னை எடுத்து, கர்ல்களை உருவாக்கிக் கொள்ளவும்.

தலைமுடி இறுக்கமாக, கலையாமல் இருக்க, ஸ்பிரே செய்து கொள்ளவும். தலைமுடியை பின் செய்து, சிறிய ஹேர்பின்களை செருகி, தலைமுடி கிடைமட்டமாக கலைந்த கொண்டையைப் போல தோன்ற வைக்கலாம். மேலே ஒரு அலங்காரமான தலைமுடி ஆக்சஸரியை வைத்து, ஹேர்பின்களை மறைத்துவிட்டால் இந்த ஹேர்ஸ்டைல் அழகாகத் தோற்றமளிக்கும்.


தாழ்வான கொண்டை: உங்கள் தலைமுடி தோள்பட்டை அளவு நீளமாக உள்ளதா? அப்போது நீங்கள் தாழ்வான கொண்டையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

hair,haircut,hairstyle,make-up,shoulder length hair, ,அலங்காரம், தலைமுடி, தோள்பட்டை நீள தலைமுடி, நெத்திச்சுட்டி, ஹேர்ஸ்டைல்

“அதனுடன் உச்சியில் கொஞ்சம் தலைமுடியை அழகாக சீவி விட்டுக் கொண்டால், உங்களுக்கு ஒரு பாரம்பரிய தோற்றம் கிடைத்து விடும்,” தவானின் கருத்துப்படி, “தளர்வாக கட்டிய கொண்டைகள், குட்டை தலைமுடியில் அழகான தோற்றத்தை எளிதாக உருவாக்கி விடும். இதுவே, குட்டையான தலைமுடிக்கு ஏற்ற சிறந்த திருமண ஹேர்ஸ்டைல்களில் ஒன்றாகும்.

ட்ரெஸ் (சுருட்டை முடிகள்):தோள்பட்டை அளவு நீளமுடைய தலைமுடி இருப்பவர்களுக்கு, கொண்டை அல்லது பின்னல்களை உருவாக்கி கொள்ள, ஹேர் எக்ஸ்டன்ஷன்களை (சவுரி) பயன்படுத்தலாம்.


அதை விடவும் தலைமுடி குட்டையாக இருந்தால் கழுத்துப்பகுதிக்கு மேலே ஒரு செயற்கை கொண்டையை அணிந்து கொள்ள முடியும். இதனால் முன்புறம் பின்னிய தலைமுடியும், பின்னல் கொண்டையும் திருமணத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தக் கூடியவை.


Tags :
|