Advertisement

குறைந்த செலவில் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க..!

By: Monisha Mon, 07 Dec 2020 12:49:33 PM

குறைந்த செலவில் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க..!

இன்றைய காலக் கட்டத்தில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய ஒரு ஒப்பனைப் பொருள் முல்தானி மெட்டி. விலை குறைவாக இருந்தாலும் அதனால் அடையக்கூடிய நன்மைகள் ஏராளம். இந்த பதிவில் முல்தானி மெட்டியை பயன்படுத்தி அழகு பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.

முல்தானி மெட்டியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, சருமத்திற்கு வாரம் ஒரு முறை ஃபேஸ் பேக்குகளைப் போட்டு வந்தால், சருமத்தின் pH அளவானது சீராக பராமரிக்கப்பட்டு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையும் நீங்கும்.

முல்தானி மெட்டியுடன் சிறிது பால், 1 டீஸ்பூன் பாதாம் பொடி சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரித்து, சரும வறட்சியும் நீங்கும்.

skin,face,beauty,blackheads,multani mitti ,சருமம்,முகம்,அழகு,கரும்புள்ளி,முல்தானி மெட்டி

2 ஸ்பூன் முல்தானி மெட்டியுடன், சிறிது தக்காளி சாறு, சந்தனப் பொடி சேர்த்து கலந்து, அத்துடன் சிறிது மஞ்சள் தூளும் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், பொலிவான சருமத்தைப் பெறலாம். அதிலும் இதனை தொடர்ந்து வாரம் ஒருமுறை போட்டு வந்தால் நல்ல பலன் தெரியும்.

முல்தானி மெட்டியுடன், தக்காளி சாறு, 1 டீஸ்பூன் தேன், எலுமிச்சை சாறு, சிறிது பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தவறாமல் செய்து வந்தால், சருமம் பளிச்கடந்து மின்னும்.

1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டியுடன், சிறிது அரைத்த புதினா, தயிர் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ 20 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

Tags :
|
|
|