Advertisement

சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை இப்படியும் பயன்படுத்தலாம்!

By: Monisha Thu, 03 Sept 2020 6:03:03 PM

சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை இப்படியும் பயன்படுத்தலாம்!

பெண்களுக்கு அழகிய தோற்றப்பொலிவை ஏற்படுத்திக்கொடுப்பதில் லிப்ஸ்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற லிப்ஸ்டிக்குகளை விட சிவப்பு நிற லிப்ஸ்டிக் எல்லோருக்கும் பொருத்தமானது. இது இளம் வயதினர், முதியோர்கள், தொழில் முனைவோர், இல்லத்தரசி என அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக அமைந்திருக்கும். சாதாரணமாக பயணம் மேற்கொண்டாலோ அல்லது தொழில் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலோ சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை தயங்காமல் உபயோகப்படுத்தலாம். அது தனித்துவமான முகப்பொலிவை பெற்றுத்தரும். சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை வேறு பலவகைகளிலும் பெண்கள் உபயோகிக்கலாம்.

நிறைய பெண்களுக்கு கண்களின் இமை பகுதியிலும், கண்களின் அடிப்பகுதியிலும் கருமை படிந்திருக்கும். கரும் புள்ளிகள், முகப்பருக்களும் ஆங்காங்கே தென்படும். அவசரமாக வெளியே கிளம்பி செல்லும் பட்சத்தில் லிப்ஸ்டிக்கை, கண்களையொட்டி இருக்கும் கருமையை மறைப்பதற்கு உபயோகிக்கலாம். லிப்ஸ்டிக்கை லேசாக பூசிவிட்டு வழக்கமான ஒப்பனையை மேற்கொள்ளலாம். அப்போது கரும் புள்ளிகள், பருக்கள் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம்.

red,lipstick,women,beauty,eyes ,சிவப்பு,லிப்ஸ்டிக்,பெண்கள்,அழகு,கண்கள்

லிப்ஸ்டிக்கை லிப் பாமாகவும் மாற்றி உபயோகிக்கலாம். தொடர்ந்து சிவப்பு லிப்ஸ்டிக்கை உபயோகித்து சலிப்படைந்தால் அதனை கொண்டு லிப் பாம் தயார் செய்யலாம். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு கோகோ வெண்ணெய் ஊற்றிவிட்டு அதனுடன் சிறிதளவு லிப்ஸ்டிக் சேர்த்து பிசையவும். அதனை மைக்ரோ ஓவனில் ஒரு நிமிடம் வைத்துவிட்டு வெளியே எடுக்கவும். அது ஆறியதும் வேறொரு கிண்ணத்தில் மாற்றிவிடவும். இதுதான் லிப் பாம். இதனை உதட்டில் பூசலாம்.

சிவப்பு நிற லிப்ஸ்டிக்குடன் மற்ற நிற லிப்ஸ்டிக்கையோ அல்லது பழைய லிப்ஸ்டிக்கையோ கலந்தும் உபயோகிக்கலாம். முதலில் 'லிப் லைனர்' பென்சிலை கொண்டு உதட்டின் மேல் பகுதியில் கோடு வரைந்து கொள்ளவும். அதன் பிறகு, தயார் செய்யப்பட்டிருக்கும் லிப்ஸ்டிக்கில் லிப் பிரஷை முக்கி உதட்டில் தடவலாம். அவ்வாறு செய்தால் உதடு பளபளப்பாக மின்னும்.

red,lipstick,women,beauty,eyes ,சிவப்பு,லிப்ஸ்டிக்,பெண்கள்,அழகு,கண்கள்

லிப்ஸ்டிக் மினுமினுப்பையும் தரக்கூடியது. இது அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றது. கன்னங்களுக்கு இயற்கையான பிரகாசமான நிறத்தையும் கொடுக்கும். கன்னத்தில் இருக்கும் தழும்புகளை மறைக்கவும் உதவும். முதலில் கன்னங்களில் வெளிர் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை லேசாக தடவி விரல்களால் மசாஜ் செய்யவும். பின்னர் ஒப்பனை தூரிகையை கொண்டு தேய்க்கவும். அதனுடன் சிறிதளவு 'பிக்ஸிங் பவுடரும்' சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

'ஐ ஷேடோ' வாகவும் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். சிறிதளவு சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை கைவிரலிலோ, ஒப்பனை தூரிகையிலோ தடவி கண்களை சுற்றி தேய்த்துவிடலாம். அதனுடன் 'ஹைலைட்டரை' யும் பயன்படுத்துவது கூடுதல் பொலிவை தரும்.

Tags :
|
|
|