Advertisement

விமர்சனங்களுக்கு மத்தியில் வசூலில் அள்ளி குவிக்கும் ஆதிபுருஷ்

By: vaithegi Thu, 22 June 2023 1:09:37 PM

விமர்சனங்களுக்கு மத்தியில் வசூலில் அள்ளி குவிக்கும் ஆதிபுருஷ்

உலகம் முழுவதும் 410 கோடி வசூல் ..... இயக்குனர் ஓம் ரவுத்தின் இயக்கத்தில் பிரபாஸ், சைஃப் அலி கான் மற்றும் கிருத்தி சனோன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இதனையடுத்து படத்தை பார்த்த பலரும் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சரியில்லை, படத்தின் ஸ்க்ரீன் பிளே சரியில்லை.பொம்மை படம் போல இருக்கிறது என்று வெளிப்படையாகவே கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

adipurush,collection ,ஆதிபுருஷ்,வசூல்


ஆனால், விமர்சனங்கள் எப்படி வந்தாலும், வசூலில் படம் உலகையே திரும்பி பார்க்க வைத்து உள்ளது. படம் திரையரங்குகளில் ஆறாவது நாளில் வசூலித்த ரூ.7.5 கோடியில், இந்தி பதிப்பு ரூ.4 கோடியை ஈட்டியது.

எனவே இதன் மூலம் இந்தியா முழுவதும் படத்தின் மொத்த வசூல் 255.3 கோடியாக உயர்ந்து உள்ளது. மேலும் தற்போது, உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் கிடைத்து உள்ளது. அதன்படி, இத்திரைப்படம் வெளியான 6 நாட்களில் உலகம் முழுவதும் 410 கோடி வசூல் செய்து உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :