Advertisement

இயக்குனர் ராஜமெளலி மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Thu, 30 July 2020 11:39:33 AM

இயக்குனர் ராஜமெளலி மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இது லேசான கொரோனா வைரஸ் தாக்குதல் தான் என்பதால் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ராஜமெளலி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

"நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் சில நாட்களுக்கு முன்பு லேசான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தோம். சில நாட்களில் காய்ச்சல் தானாகவே தணிந்தது, ஆனாலும் நாங்கள் சோதனை செய்யப்பட்டோம். இதன் விளைவாக லேசான கோவிட் 19 பாதிப்பு இருந்துள்ளது.

rajamouli,corona,family,loneliness,twitter post ,ராஜமௌலி, கொரோனா, குடும்பத்தினர், தனிமை, டுவிட்டர் பதிவு

இதையடுத்து டாக்டர்கள் பரிந்துரைத்தபடி நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். நாங்கள் அனைவரும் எந்த அறிகுறிகளும் இல்லாமல் நன்றாக உணர்கிறோம், ஆனால் எல்லா முன்னெச்சரிக்கை மற்றும் வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம். நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும், பிளாஸ்மா தானம் செய்யக் காத்திருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் ராஜமெளலி இப்போது ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார். சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கோமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை படமாக எடுத்து வருகிறார். சீதாராம ராஜுவாக ராம் சரணும், கோமரம் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|