Advertisement

' இந்தியன் 2’ பட போஸ்டர் வெளியீடு

By: vaithegi Tue, 07 Nov 2023 3:24:56 PM

' இந்தியன் 2’ பட போஸ்டர் வெளியீடு

உலகநாயகன் கமல்ஹாசன் தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அதற்கு சினிமா துறையை தாண்டி அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு, “வீரசேகரன் சேனாபதி என்கிற கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என இந்தியன் 2 தயாரிப்பு நிறுவனம் லைக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி கொண்டு வருகிறது.

poster,indian 2 ,போஸ்டர் ,இந்தியன் 2


இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ”இந்தியன் 2” திரைப்படம், தமிழ் சினிமாவில் இன்னும் வெளியாகாமல் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் படங்களில் ஒன்று.

இதனை அடுத்து இந்த படத்தினுடைய முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில், தற்போது இரண்டாவது பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது.

Tags :
|