Advertisement

21 ஆண்டுகள் கனவு... ரஜினியை சந்தித்த சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி டுவிட்

By: Nagaraj Mon, 13 Mar 2023 11:32:17 PM

21 ஆண்டுகள் கனவு... ரஜினியை சந்தித்த சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி டுவிட்

சென்னை: இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சூப்பர்ஸ்டார் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து பேசி இருக்கிறார். இது 21 வருட கனவு என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்திற்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சினிமா மட்டுமின்றி மற்ற துறைகளில் முன்னணியில் இருக்கும் பிரபலங்கள் கூட ரஜினிக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். தற்போது இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சூப்பர்ஸ்டார் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து பேசி இருக்கிறார்.

sanju samson,21 years,leader,twitter,register,fan ,சஞ்சு சாம்சன், 21 ஆண்டுகள், தலைவர், ட்விட்டர், பதிவு, ரசிகன்

ரஜினியை சந்தித்தது பற்றி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் சஞ்சு சாம்சன் கூறி இருப்பதாவது: "ஒரு சூப்பர் ரஜினி ரசிகனாக நான் 7 வயதில் ஒரு விஷயத்தை பெற்றோரிடம் கூறினேன்.. 'ஒரு நாள் கண்டிப்பாக ரஜினி சாரை அவர் வீட்டில் சந்திப்பேன்' என கூறினேன்.

தற்போது 21 வருடங்கள் கழித்து தலைவர் என்னை அழைத்த நாள் வந்துவிட்டது" என சஞ்சு சாம்சன் தெரிவித்து இருக்கிறார்.

Tags :
|