Advertisement

நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜிற்கு 2வது திருமணம்

By: Nagaraj Mon, 06 Mar 2023 10:15:31 AM

நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜிற்கு 2வது திருமணம்

ஆந்திரா: திருமணம் நடந்தது... நடிகர் மோகன் பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் 2வது திருமணம் செய்து கொண்டார். அவருக்கும் ஆந்திர அரசியல்வாதியான பூமா ரெட்டியின் மகளான பூமா மவுனிக்காவை மணந்தார்.

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் மோகன் பாபு. அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நெருங்கிய நண்பர். இவருடைய மகன் மஞ்சு மனோஜ் பிரபல நடிகராக இருக்கிறார். அவருக்கும் ஆந்திராவில் முன்னாள் அமைச்சராக இருந்த பூமா ரெட்டியின் மகளுக்கும் சிறப்பாக திருமணம் நடைபெற்றுள்ளது.

இதில் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு திரையுலகைச் சேர்ந்த நடிகர் நடிகைகளும், அரசியல்வாதிகளும் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர். இவர்கள் திருமணத்தை சுற்றிய சர்ச்சை தகவல் ஒன்று உலாவிக் கொண்டிருந்த நிலையில் அது இப்போது வதந்தி என நிரூபணமாகியுள்ளது.

மோகன் பாபுவின் மகனும் நடிகருமான மஞ்சு மனோஜூக்கு 2015 ஆம் ஆண்டு பிரணிதா ரெட்டி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

Tags :