Advertisement

யோகி பாபு படத்தின் 2வது பாடல், ஜனவரி 20 ஆம் தேதி வெளியீடு

By: vaithegi Wed, 18 Jan 2023 10:17:22 PM

யோகி பாபு படத்தின் 2வது பாடல், ஜனவரி 20 ஆம் தேதி வெளியீடு

2வது பாடல், ஜனவரி 20 ஆம் தேதி வெளியீடு .... இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி'. இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தில் முன்னணி காமெடி நடிகர் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதனை அடுத்து இந்த திரைப்படத்திற்கு கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க, அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

yogi babu,song ,யோகி பாபு,பாடல்

இதையடுத்து 'பொம்மை நாயகி' படத்தின் 1-வது பாடலான 'அடியே ராசாத்தி' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் படத்தின் 2-வது பாடல், ஜனவரி 20 ஆம் தேதிவெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

'பொம்மை நாயகி' திரைப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :