Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சூரரைப்போற்று படத்தில் மேலும் 3 அற்புதமான பாடல்கள்...சூர்யா ரசிகர்கள் உற்சாகம்

சூரரைப்போற்று படத்தில் மேலும் 3 அற்புதமான பாடல்கள்...சூர்யா ரசிகர்கள் உற்சாகம்

By: Monisha Mon, 07 Sept 2020 11:50:41 AM

சூரரைப்போற்று படத்தில் மேலும் 3 அற்புதமான பாடல்கள்...சூர்யா ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்னரே முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் 30ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸாகவிருப்பதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட் ஆகின. இந்த படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களில் வெய்யோன் சில்லி மற்றும் காட்டுப்பயலே பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.

இந்த நிலையில் இந்த படத்தில் கூடுதலாக சில பாடல்கள் இணைக்கப்படும் என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கூறியிருந்த நிலையில் தற்போது மேலும் 3 அற்புதமான பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

actor surya,soorarai pottru,songs,fans,excitement ,நடிகர் சூர்யா,சூரரைப்போற்று,பாடல்கள்,ரசிகர்கள்,உற்சாகம்

புதியதாக இணைக்கப்பட்டுள்ள இந்த பாடல்கள் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் முறைப்படி அறிவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளன்ர.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ளனர். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Tags :
|
|