Advertisement

ருத்ரன் படத்தின் 3வது பாடல் வெளியீடு; ரசிகர்கள் வரவேற்பு

By: Nagaraj Sun, 02 Apr 2023 10:02:51 PM

ருத்ரன் படத்தின் 3வது பாடல் வெளியீடு; ரசிகர்கள் வரவேற்பு

சென்னை: ருத்ரன்’ படத்தின் மூன்றாவது பாடலான உன்னோடு வாழனும் பாடல் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று வெளியான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

movie,ruthran,song ,, உன்னோடு வாழனும், ருத்ரன், வைரல்

ருத்ரன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது.

படத்தின் கிளைம்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. உன்னோடு வாழணும் பாடல் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், ‘ருத்ரன்’ படத்தின் மூன்றாவது பாடலான உன்னோடு வாழனும் பாடல் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அறிவித்தபடி படத்தின் பாடலை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பாடகர் சித்ஸ்ரீராம் குரலில் கபிலனின் வரிகளில் வெளிவந்த இந்தப் பாடல் இணையத்தில் பலராலும் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது. ருத்ரன் படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது.

Tags :
|