Advertisement

பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக 4 திரையுலக பிரபலங்கள் நியமனம்!

By: Monisha Fri, 03 July 2020 4:01:45 PM

பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக 4 திரையுலக பிரபலங்கள் நியமனம்!

தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுக்கு இடையே பாஜக தன்னை நிலை நிறுத்தி கொள்ள கடும் முயற்சியில் இறங்கி உள்ளது. தமிழகத்தில் தாமரையை மலர வைக்க அக்கட்சியின் நிர்வாகிகள் கடந்த சில வருடங்களாக தீவிர முயற்சியில் உள்ளனர். குறிப்பாக பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அவர்கள் நியமனம் செய்யப்பட்ட பின் பல அதிரடி மாற்றங்கள் கட்சியில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்று முன் புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பை பாஜக தமிழகத் தலைமை வெளியிட்டுள்ளது. அதில் மாநிலத் துணைத் தலைவர்களாக நயினார் நாகேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன், சமீபத்தில் திமுகவிலிருந்து பாஜகவில் இணைந்த விபி துரைசாமி உள்பட பலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

bjp,members,celebrities,actress,appointment ,பாஜக,உறுப்பினர்,பிரபலங்கள்,நடிகைகள்,நியமனம்

இந்த நிலையில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக ஒருசில திரையுலக பிரபலங்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நடிகை நமீதா, நடிகை குட்டிபத்மினி, நடிகை கௌதமி மற்றும் நடிகை மதுவந்தி ஆகிய நான்கு நடிகைகளும் மாநில செயற்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|