Advertisement

தீபாவளி பண்டிகையில் வெளியிட தயாராகிய 4 படங்கள்!

By: Monisha Wed, 04 Nov 2020 4:11:54 PM

தீபாவளி பண்டிகையில் வெளியிட தயாராகிய 4 படங்கள்!

தமிழகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு வருகிற 10-ந்தேதி 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறப்பதால் தீபாவளிக்கு என்னென்ன புதிய படங்கள் திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் பெரிய கதாநாயகர்கள் படங்கள் எதுவும் தீபாவளிக்கு ரிலீசாகாது என்பது உறுதியாகி உள்ளது.

தற்போதையை சூழ்நிலையில் எம்.ஜி.ஆர். மகன், பிஸ்கோத், இருட்டு அறையில் முரட்டு குத்து 2, களத்தில் சந்திப்போம் ஆகிய 4 படங்களை தீபாவளி பண்டிகையில் வெளியிட தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

diwali festival,movies,theater,release,expectation ,தீபாவளி பண்டிகை,படங்கள்,தியேட்டர்,ரிலீஸ்,எதிர்பார்ப்பு

எம்.ஜி.ஆர். மகன் படத்தில் சசிகுமார், சத்யராஜ் இணைந்து நடித்துள்ளனர். பொன்ராம் இயக்கி உள்ளார். சந்தோஷ் ஜெயகுமார் நடித்துள்ள இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தின் டிரெய்லர் மற்றும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ஆபாசமாக இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. இது ஏற்கனவே வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது.

ராஜசேகர் இயக்கிய களத்தில் சந்திப்போம் படத்தில் ஜீவா, அருள்நிதி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். கண்ணன் இயக்கி உள்ள பிஸ்கோத் படத்தில் சந்தானம், தாரா அலிஷா ஜோடியாக நடித்துள்ளனர்.

Tags :
|