- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் 96 பீர் பாட்டில்கள் - போலீசார் வழக்குப்பதிவு
நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் 96 பீர் பாட்டில்கள் - போலீசார் வழக்குப்பதிவு
By: Monisha Sat, 13 June 2020 6:38:18 PM
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னையில் மதுபானக் கடைகள் திறக்கப்படவில்லை. சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலர் சென்னையைத் தாண்டிச் சென்று மதுபாட்டில்கள் வாங்கி வருவதைத் தடுக்க சோதனைச் சாவடிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கிழக்கு கடற்கரைச்சாலையில் முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் வாகனசோதனை செய்துக் கொண்டிருந்த கானத்தூர் போலீசார், அங்கு வந்த காரை மறித்து, சோதனை செய்தனர்.
அப்போது அந்த காரில் நடிகை ரம்யா கிருஷ்ணன், அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் ஆகியோர் இருந்துள்ளனர். சோதனையில் அந்த காரில் 96 பீர் பாட்டில்கள், 8 மதுப்பாட்டில்கள் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அந்த கார் டிரைவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் டிரைவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.