Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஓர் இரவில், ஒரு கட்டிடத்துக்குள் நடக்கும் பரபரப்பு சம்பவங்களே கேசினோ

ஓர் இரவில், ஒரு கட்டிடத்துக்குள் நடக்கும் பரபரப்பு சம்பவங்களே கேசினோ

By: Nagaraj Thu, 12 Jan 2023 12:03:57 PM

ஓர் இரவில், ஒரு கட்டிடத்துக்குள் நடக்கும் பரபரப்பு சம்பவங்களே கேசினோ

சென்னை: ஓர் இரவில், ஒரு கட்டிடத்துக்குள் நடக்கும் பரபரப்பு சம்பவங்களை மையப்படுத்தி, விறுவிறுப்பான திரில்லராக உருவாகியுள்ளது கேசினோ படம்.

மாதம்பட்டி சினிமாஸ் & MJ Media Factory தயாரிப்பில், இயக்குநர் மார்க் ஜோயல் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் தான் கேசினோ.

புதுமையான வகையில், ஓர் இரவில், ஒரு கட்டிடத்துக்குள் நடக்கும் பரபரப்பு சம்பவங்களை மையப்படுத்தி, விவிறுப்பான திரில்லராக உருவாகியுள்ளது இந்தப் படம்.

casino,one night,rameshtilak,eruma sani,lead role ,கேசினோ, ஒரே இரவு, ரமேஷ்திலக், எரும சாணி, முக்கிய பாத்திரம்

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே புதுமையான வகையில் ஒரு காமிக்ஸ் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில் ஒரு குழுவின் துப்பாக்கி சண்டை, பணத்தைத் தேடி ஓடும் பாத்திரம் ஆகியன காட்டப்பட்டுள்ளது.

இந்த காட்சிகள் ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும் பரபரப்பான திரில்லரான இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. இப்படம் முழுக்க கோயம்புத்தூரில், இரவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகளில் 70 சதவீதம் ஒரு கட்டிடத்துக்குள் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

மெஹந்தி சர்க்கஸ் நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, வாணி போஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரமேஷ் திலக், ஜான் மகேந்திரன், ‘எரும சாணி’ அமர் கீர்த்தி, நக்கலைட்ஸ் செல்லா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

Tags :
|