Advertisement

விடுதலை படத்திற்கு ஏ சான்றிதழ்... படக்குழுவினர் அதிர்ச்சி

By: Nagaraj Fri, 24 Mar 2023 8:18:54 PM

விடுதலை படத்திற்கு ஏ சான்றிதழ்... படக்குழுவினர் அதிர்ச்சி

சென்னை; விடுதலை படத்திற்கு ஏ சான்றிதழ்... வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘விடுதலை’ இந்த படத்தின் சென்சார் தகவல் வெளியாகி உள்ளது. சென்சார் அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், 18 வயதுக்குட்பட்ட திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்க்க முடியாது.

அதுமட்டுமின்றி இந்த படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் அனுமதிக்க முடியாது. இப்படத்தின் ரன்னிங் டைம் 150 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 30 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கவுதம் மேனன், பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர், இளையராஜா இசையமைத்துள்ளார். ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Tags :
|