Advertisement

புஷ்பா -2 படத்தின் ஒரு நாள் படப்பிடிப்பு செலவு ரூ.80 லட்சமாம்

By: Nagaraj Fri, 30 June 2023 11:55:21 PM

புஷ்பா -2 படத்தின் ஒரு நாள் படப்பிடிப்பு செலவு ரூ.80 லட்சமாம்

ஐதராபாத்: புஷ்பா 2' படத்தின் ஒரு நாள் படப்பிடிப்புக்கான செலவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'புஷ்பா 2' படத்தின் சண்டைக்காட்சிக்கான ஒருநாள் படப்பிடிப்புக்கு சுமார் 80 லட்சம் வரை செலவு ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்து கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தில், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில், உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருநதார்.

தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் வெளியாகி, இந்திய அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

pushpa 2,action,cost,shooting,information ,புஷ்பா 2, சண்டைக்காட்சி, செலவு, படப்பிடிப்பு, தகவல்

செம்மரங்களை வெட்டும் கூலித் தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கும் அல்லு அர்ஜூன் பின்னர், மிகப்பெரிய கடத்தல் தாதாவாக மாறும்படியாக இப்படம் உருவாகியிருந்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, 2ம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'புஷ்பா 2' படத்தின் ஒரு நாள் படப்பிடிப்புக்கான செலவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 'புஷ்பா 2' படத்தின் சண்டைக்காட்சிக்கான ஒருநாள் படப்பிடிப்புக்கு சுமார் 80 லட்சம் வரை செலவு ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
|
|